கேள்வி நேரம்
குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா
கேள்வி நேரம் (பெரியோரின் கேள்விகளும் பிள்ளைகளின் பதில்களும்)
தொகுத்தவர் :
குழந்தைக் கவிஞர்
அழ. வள்ளியப்பா
விற்பனை உரிமை:
பாரி நிலையம்
184.பிராட்வே சென்னை-600108
KELVI NERAM
(Question Hour)
Éditor : Al.VALLIAPPA
Illustrator : Suba
publisher : Kułandai Puthaka Nilayam
Madras-40
Distributor : Paari Nilayam, Madras - 108
Printer : Jeevan Press, Madras-5
First Edition : Aprii, 1988
Price : Rs. 10.00
வெளியிட்டோர் :
குழந்தைப் புத்தக நிலையம்
சென்னை 40
விலை ரூபாய் : பத்து
அன்புக் குழந்தைகளே,
இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்ததும், உங்கள் உள்ளத்திலே ஒரு மகிழ்ச்சி தோன்றும்.
"இந்தப் புத்தகத்தைப் படிப்பதற்கு முன்பு இருந்ததை விட, இப்போது நம் பொது அறிவு சற்று அதிகமாக வளர்ந்துள்ளது" என்று நீங்கள் நிச்சயமாக நினைத்து மகிழ்வீர்கள்.
இதில் மொத்தம் 11 பகுதிகள் உள்ளன. ஒவ்வொரு பகுதியிலும், பெரியவர்களில் ஒருவர் கேள்வி கேட்க, மூன்று நான்கு சிறுவர், சிறுமியர் பதில் கூறுகிறார்கள். மொத்தம் 11 பெரியவர்களும், 38 சிறுவர் சிறுமியரும் பங்கு எடுத்துக் கொண்டுள்ளனர்.
வரலாறு, புவிஇயல், விஞ்ஞானம், விளையாட்டு, நுண்கலைகள், தலைவர்களைப் பற்றிய செய்திகள் எனப் பலவற்றையும் இப்புத்தக வாயிலாக அறியலாம்.
வெறும் கேள்வி-பதிலாக இல்லாமல், விடைகளுடன் தேவையான விளக்கங்களையும் காணலாம்.
இதிலுள்ள பகுதிகள் அனைத்தும் ‘கோகுலம்’ மாத இதழில் தொடர்ந்து வெளி வந்தவையே. புத்தகமாக இக் கேள்வி-பதில்களை வெளியிட அனுமதியளித்த ‘கோகுலம்’ நிர்வாகிகளுக்கும், பங்கு கொண்ட பெரியவர்கள், சிறுவர், சிறுமியர் ஆகியோருக்கும், உள் படங்களை வரைந்து தந்த ஒவியர் ஸூபா அவர்களுக்கும், அட்டைப் படத்தைத் தீட்டித்தந்த ஒவியர் ஆனந்தன் அவர்களுக்கும், புத்தகத்தை உரிய காலத்தில் அச்சிட்டுத் தந்த ஜீவன் அச்சகத்தாருக்கும் எங்கள் நன்றி.
சென்னை-40 பதிப்பாளர்
17-4-1988
பொருள் அடக்கம்
கேள்வி கேட்பவர் பங்குகொள்வோர்
ரா. பொன்ராசன் ரா. கார்த்தியாயினி,
மா. ராஜாத்தி,
மோ. ராஜேஷ் க. பழனிவேலு
உமா விஜி கனகசபை, யாழினி
எஸ். சரளா ஆர். கிரி, ஆர். பிரீதி
ஏ. பிரின்ஸ்
மு. சிவம் முத்துக்குமார், தங்கமாரி,
ஜோதி
இரத்தினகுமாரி சத்தியநாராயணன் (சதீஷ்)
விஜி ஆரோக்கிய ரவி (ரவி)
திலகவதி ரங்கநாதன், கவிதா,
ராமச்சந்திரன், அமுதா,
குழந்தை புனிதா
தேனி முருகேசன் எம். கார்த்திகேயன்,
டி. சசிகலா எல். லிங்கராஜ்
அலமேலு அழகப்பன் எஸ். ஜெயா, பி. கிரிசங்கர்
பி. கே. சரவணன்
பால நடராஜன் சி. பத்மஜா,
ம. இராஜலெட்சுமி,
கி. சுப்பிரமணியன்
டாக்டர் மா. சூடாமணி குமார், சீதாராமன்,
ராஜேஸ்வரி, சுப்பிரமணியம்,
ஆனந்த்
பி. பத்மா கே. வரதராஜன், பமீலா
நாராயணன், ஆர். பிரபாகரன்
இடம் : குன்றக்குடி | கேள்வி கேட்பவர் : ரா பொன்ராசன்
பங்கு பெறுவோர் :
ரா. கார்த்தியாயினி, மா. ராஜாத்தி
மோ. ராஜேஷ், க. பழனிவேல்.
3085-1
பொன்ராசன்: பிள்ளைத் தமிழ் என்றால் என்ன, தெரியுமா?
ராஜேஷ்: ஒ. தெரியுமே! எங்களைப் போன்ற பிள்ளைகளுக்காக எழுதப்படும் தமிழ்தானே?
பொன்: இல்லை, இல்லை. வேறு யாருக்காவது தெரியுமா?
பழனிவேலு : 'பிள்ளைத் தமிழ்' என்றால் கடவுளைப் பிள்ளையாக வைத்துப் பாடியது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். 'மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்' என்பதுகூட அப்படிப்பட்டதுதானே?
பொன் : ஆமாம். கடவுளைப் பற்றி மட்டுமல்ல; தங்களுக்கு விருப்பமான அரசர்கள், தலைவர்களைப் பற்றிக்கூடக் கவிஞர்கள் பாடியிருக்கிறார்கள். 'கம்பன் பிள்ளைத் தமிழ்', 'காந்தி பிள்ளைத் தமிழ்' என்றெல்லாம் பல பிள்ளைத் தமிழ் நூல்கள் உண்டு. சரி, தமிழில் முதலாக வெளி வந்த நாவல் எது? அதை எழுதியவர் பெயர் என்ன?
ராஜேஷ் : பிரதாப முதலியார் எழுதிய வேத நாயகம் பிள்ளை சரித்திரம்.
கார்த்தியாயினி : ஐயையோ! ராஜேஷ் மாற்றிச் சொல்லிவிட்டானே! வேதநாயகம் பிள்ளை எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் என்பதுதானே சரியான விடை?
பொன் : ஆமாம். கார்த்தியாயினி சரியாகச் சொல்லிவிட்டாள்...காந்தி திரைப்படம் பார்த்திருப்பீர்கள். அதில் அமிர்தசரசிலுள்ள ஜாலியன் வாலாபாக்கில் இந்தியர்களை வெள்ளைக்காரர்கள் ஈவு இரக்கமில்லாமல் சுட்டுக் கொன்றார்களே, அதில் சுமார் எத்தனை பேர் இறந்திருப்பார்கள்? எத்தனை பேர் காயம் அடைந்திருப்பார்கள்?
பழனி : 400 பேர் இறந்திருப்பார்களா?
ராஜாத்தி: சமீபத்தில் நான் ஒரு புத்தகத்தில் படித்தேன். 379 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், 1200 பேர் காயமடைந்ததாகவும் அதில் எழுதியிருந்தது.
பொன்: சபாஷ் ராஜாத்தி, படித்ததை நன்றாக நினைவில் வைத்திருக்கிறாயே!... சென்னையில் கிரிக்கெட் டெஸ்ட் பந்தயங்கள் நடக்கும் ஸ்டேடியத்தின் பெயர் தெரியுமா?
ராஜேஷ்: எனக்குத் .தெரியும். சிதம்பரம் ஸ்டேடியம்.
பொன்: கரெக்ட். சென்னைப் பல்கலைக் கழகத்திற்குப் பக்கத்திலுள்ள சிதம்பரம் ஸ்டேடியத்தில்தான் கிரிக்கெட் டெஸ்ட் பந்தயங்கள் நடைபெறுகின்றன. உலகிலேயே அதிகமான பன்றிகள் உள்ள தேசம் எது?
ராஜேஷ் : சீனாதான்.
பொன் : ராஜேஷ் மிகவும் சரியாகச் சொல்லி விட்டான். சீனா தேசத்தில் உள்ள பன்றிகளின் எண்ணிக்கை 8 கோடி என்கிறார்கள்!...தமிழ் நாட்டிலே முதல் முதலாகக் கதர் பிரசாரம் செய்தவர் யார்?
கார்த்தியாயினி : ராஜாஜி
பொன் : இல்லை.
பழனி ஈ. வெ. ராமசாமிப் பெரியார்.
பொன் : அடே, சரியாகச் சொல்லி விட்டாயே..! இந்தியாவிலே பனை மரங்கள் அதிகமாக உள்ள மாநிலங்களைக் கூற முடியுமா?
ராஜாத்தி நமது தமிழ்நாட்டில்தான் நிறையப் பனை மரங்களைப் பார்க்கிறோமே?
பொன் , தமிழ்நாட்டில் மட்டும்தானா? இன்னும் இரண்டு மாநிலங்களிலும் நிறையப் பனை மரங்கள் இருக்கின்றனவே! 9
கார்த்தியாயினி : ஆந்திர மாநிலம்.... அப்புறம். அப்புறம்...
பொன் : மேற்கு வங்காளத்திலும் அதிகமான பனை மரங்களைக் காணலாம். சரி... இதோ இந்தப் படத்தில் இருப்பவர் யார் என்று தெரிகிறதா?
பழனி: பெர்னார்ட்ஷா.
பொன் : இல்லை, நம் இந்தியாவின் தலைசிறந்த தேச பக்தர்களில் ஒருவர். ’சுயராஜ்ஜியம்’ என்ற சொல்லை முதல் முதலாகப் பயன்படுத்தியவர்... இன்னுமா தெரியவில்லை?
கார்த்தியாயினி : தாதாபாய் நெளரோஜி.
பொன்: சரியான விடை. பிரிட்டிஷ் பாராளுமன்றத்திற்கு முதல் முதலாகத் தேர்ந்தெடுக்கப் பெற்ற இந்தியர் இவர்தான். 1906-ஆம்
ஆண்டு கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டுக்குத் தலைமை தாங்கிப் பேசும் போது, "நாங்கள் ஆங்கிலேயரிடத்தில் பிச்சை கேட்கவில்லை; உரிமையைத்தான் கேட்கிறோம்” என்று முழங்கினார். பழைய டில்லியில் யமுனை ஆற்றங்கரையில் நம் தேசத் தந்தை மகாத்மா காந்தியின் சமாதி இருக்கிறது. அதன் அருகிலே வேறு இரு தலைவர்களின் சமாதிகளும் இருக்கின்றன. அந்தத் தலைவர்கள் யார், யார்?
பழனி: நேரு மாமா, இன்னொருவர்...
ராஜாத்தி : லால் பகதூர் சாஸ்திரி.
பொன்: இருவரும் சேர்ந்து சரியான விடையளித்து விட்டீர்கள். குடல் காய்ச்சல்” என்றால் என்ன?
பழனி: என்ன! குடல் காய்ச்சலா!
பொன்: ஆம், தமிழ்நாட்டில் சில பகுதிகளில் அப்படித்தான் சொல்கிறார்கள். குடலை அதிகமாகப் பாதிக்கும் காய்ச்சலாதலால்...
ராஜாத்தி: தெரியும், தெரியும். டைபாய்டு காய்ச்சல்தான்.
பொன் : ரொம்ப சரி, உலகிலேயே மிகப்பெரிய ரயில்வே ஸ்டேஷன் எங்கே இருக்கிறது?
பழனி : ஜப்பானில்
பொன் : இல்லை.
ராஜேஷ் : அமெரிக்காவில்
பொன் . அதுசரி, அமெரிக்காவில் எந்த நகரத்தில்...?
ராஜேஷ் : நியூயார்க் நகரத்தில்.
பொன்: சரியாகச் சொன்னாய், நியூயார்க்கில் கிரான்ட் சென்ட்ரல் டெர்மினல்’ என்ற ரயில்வே ஸ்டேஷனில் 47 பிளாட்டாரங்கள், 67 ரயில்வே தடங்கள் இருக்கின்றன. பரப்பளவு 48 ஏக்கர்!... திருக்கொடுங்குன்றம்’ என்ற ஊர்ப் பெயரை உங்களில் யாராவது கேள்விப்பட்டதுண்டா?
பழனி: நான் கேள்விப்பட்டிருக்கிறேன். பிரான் மலைக்கு அப்படி ஒரு பெயர் உண்டாம்.
பொன்: அடே, சரியாகச் சொல்லிவிட்டாயே! அங்குள்ள முருகனை அருணகிரிநாதர் பாடியிருக்கிறார். மிளகாயை நம் நாட்டில் பரப்பியவர்கள் யார்?
ராஜேஷ் : ஆங்கிலேயர்.
ராஜாத்தி : இல்லை. போர்த்துகீசியர்கள் தான்
பொன்: சரியான பதில். மிளகாய் வருவதற்கு முன்பு, நம் நாட்டில் மிளகைத்தான் பயன்படுத்தி வந்தார்கள்... டில்லியில் நடந்த
ஒன்பதாவது ஏஷியாட்டில் இந்தியா பெற்ற மொத்தப் பதக்கங்கள் எத்தனை?
பழனி : தங்கப் பதக்கம், வெள்ளிப் பதக்கம் இரண்டையும் சேர்த்துச் சொல்ல வேனுமா?
பொன் : வெண்கலப் பதக்கத்தை விட்டு விடலாமா? தங்கம், வெள்ளி, வெண்கலம் மூன்றையும் சேர்த்துச் சொல்லுங்கள்
பழனி : தங்கப் பதக்கங்கள் 13 வெள்ளி 19, வெண்கலம் 25. ஆக மொத்தம் 57.
பொன்: அடே! இல்வளவு சரியாகச் சொல்கிறாயே! சரி. ஆடிப்பெருக்கு என்கிறார்களே, அதுபற்றித் தெரியுமா?
ராஜாத்தி : ஆடிமாதம் முதல் முதலாக ஆறுகளில் நீர் பெருகி வருமே, அதைத்தான் ஆடிப் பெருக்கு என்கிறார்கள் . பொன் : ஆமாம். ஆடி 18-ம் தேதி அதை விழாவாகக் கொண்டாடுவதால், பதினெட்டாம் பெருக்கு என்றும் சொல்வார்கள்... மகா பாரதத்தை முதன் முதலில் யார் எந்த மொழியில் எழுதினார்?
கார்த்தியாயினி: . வியாசர் சமஸ்கிருதத்தில் எழுதினார்.
பொன்: சரியான விடை அதைத் தழுவித் தமிழில் யார் யார் எழுதினார்கள்?
கார்த்தியாயினி: வில்லிபுத்துராழ்வார்.
ராஜேஷ்: . பெருந்தேவனாரும் எழுதியிருக்கிறார்.
பொன்: இன்னொருவரும் எழுதியிருக்கிறார். அவர் பெயர் கல்லாப்பிள்ளை...சில அழைப்பு களின் அடியில் R. S. V. P. என்று போட்டிருப்பார்கள் பார்த்திருக்கிறீர்களா?
அதற்கு என்ன பொருள்?
எல்லாரும் : மெளனம்.
பொன் : தெரியவில்லையா? நானே சொல்கிறேன். 'முடிந்தால் தயவு செய்து பதிலளிக்கவும்' என்றுதான் அர்த்தம், ஆனால், இது Repondez S’il Vous Plait என்ற பிரெஞ்சு வாக்கியத்தின் சுருக்கம்தான்! ... சமீபத்தில் நான் ஒரு கதை படித்தேன். ”அமாவாசை
இரவிலே ஒரு சிறுவன் விளக்கில்லாமல் சைக்கிளில் செல்கிறான். எதிரே ஒருவர் ஒற்றை மாட்டு வண்டியை மிக மெதுவாக ஒட்டி வருகிறார். வேறு ஆட்களோ, கார், வண்டிகளோ அந்தச் சாலையில் இல்லை. இருட்டிலே எதிரே வண்டி வருவது தெரியாமல் அவன் சைக்கிளை ஒட்டிச் செல்கிறான். நல்ல வேளையாக, வண்டிக்குச் சிறிது துரத்தில் செல்லும்போதே, மாட்டின் கண்களில் பளபள என்ற ஒளி தெரிகிறது. அதைக் கண்டு, அவன் சைக்கிளை ஒர் ஒரமாக ஒட்டித் தப்பித்துக் கொள்கிறான் 'இப்படி அவர் எழுதியிருப்பதில் ஒரு தவறு. இருக்கிறது. கண்டுபிடிக்க முடியுமா?
பழனி: இருட்டிலே மாட்டின் கண்களிலே எப்படி ஒளி தெரியும்? அதன் முகத்திலே ஒளி பட்டால்தானே, கண் பளபளப்பாகத் தெரியும்? அங்குதான் வெளிச்சம் படுவதற்கு வழியே இல்லைய
பொன்: அடேடே! மிகவும் நன்றாகச் சொன்னாய். இரவிலே மாட்டின் கண்களில் தானாக ஒளி தெரியாது. ஏதேனும் வெளிச்சம் பட்டால், பளபளப்பான அதன் கண்களில் ஒளி பிரதிபலிக்கும்.
இடம் : சென்னை அண்ணாநகர் கேள்வி கேட்பவர் : உமா
பங்கு பெறுவோர் : விஜி, கனகசபை, யாழினி
உமா: இப்போ உங்களை நான் ஒரு கேள்வி கேட்கப் போகிறேன். எங்கே சரியான பதில் சொல்லுங்க, பார்க்கலாம். கப் அண்ட் சாசரிலே கப் இருக்குதே- அதுதான் கோப்பை- அதன் கைப்பிடி எந்தப் பக்கம் இருக்கும் ?
விஜி : வலது பக்கம்.
கனகசபை இல்லை, இடது பக்கம்.
யாழினி : இரண்டும் தப்பு. வெளிப் பக்கம் தான் இருக்கும்.
உமா : யாழினி. வெளிப் பக்கம்னு நீ சொன்னது தான் சரி. கோப்பையை வலது பக்கமாய்ப் பிடித்தால், கைப் பிடி வலப் பக்கம் இருக்கும் இடது பக்கமாய்ப் பிடித்தால், இடப் பக்கம் இருக்கும். அதனாலே, யாழினி வெளிப் பக்கம்னு சொன்னதுதான் சரி. விஜி, நீ கிளி பார்த்திருக்கிறாயா?
விஜி: ஓ! பார்த்திருக்கிறேனே!
உமா: எங்கே பார்த்திருக்கிறாய்?
விஜி : மரத்தடியிலே கிளி ஜோஸ்யம் சொல்றாரே அவருக்கிட்டே பார்த்திருக்கிறேன்.
உமா: சரி, கிளியினுடைய ஒரு காலில் எத்தனை விரல்கள் இருக்கும்?
விஜி: அஞ்சு.
உமா: தப்பு.
யாழினி : நாலு,
உமா : அதுவும் இல்லேன்னா மூனுன்னு சொல்லுவீங்க. ஆனால், நாலுங்கிறதுதான் சரி... போகட்டும். அந்த நாலு விரல்களிலே முன்னாலே எத்தனை விரல்கள் இருக்கும்? பின்னாலே எத்தனை விரல்கள் இருக்கும்”
விஜி: முன்னாலே ஒண்னு. பின்னாலே முணு. . உமா: தப்பு, தப்பு.
யாழினி: நான் சொல்லட்டுமா? முன்னாலே மூணு பின்னாலே ஒண்ணு.
உமா : யாழினி, நீ சொன்னதும் தப்பு. நானே சொல்லிவிடுகிறேன். முன்னாலே இரண்டு; பின்னாலே இரண்டு விரல்களிருக்கும்... விஜி, இன்னொரு தடவை கிளி ஜோஸ்யர்கிட்டே போய் நல்லாப் பார்த்துட்டு வா. (எல்லோரும் சிரிக்கிறார்கள்)
உமா: இன்னொரு கேள்வி. TABLE நடுவே என்ன இருக்கும்?
விஜி : புத்தகம்.
உமா: இல்லை.
யாழினி: தட்டு.
உமா: இல்ல
கனகசபை: பேனா
உமா: இல்லை.
விஜி : நான் சொல்றேன்.
உமா : விஜி, நீ இந்தக் கேள்விக்கு இரண்டாம் தடவையாய்ப் பதில் சொல்கிறாய். இப்பவா வது சரியாச் சொல்லு.
விஜி: இதோ சரியான பதில், டேபிள் கடுவே -B தான் இருக்கும். TABLE என்ற ஐந்தெழுத்துக்கு நடுவிலே இருப்பது B' தானே!
உமா : கரெக்ட். விஜி சரியாச் சொல்லிட்டாள். அடுத்ததாக ஒரு கேள்வி. ஆகாயத்திலே பிறைச் சந்திரன் தெரியுது. பார்த்தவுடனே அது வளர் பிறையா, தேய்பிறையா என்று எப்படிக் கண்டுபிடிப்பீங்க?
கனகசபை: வளர்பிறையாக இருந்தால், கீழே இருந்து மேல் பக்கமா படகு போல் வளைஞ் சிருக்கும். தேய்பிறையாக இருந்தால் மேல் பக்கத்திலே யிருந்து கீழ்ப்பக்கமா குடை போல் வளைஞ்சு இருக்கும்.
உமா: அடே, கனகசபை உடனே சொல்லிட்டானே! கெட்டிக்காரன்! இப்போது ஒரு கணக்கு. 6 மணி அடிக்க 30 விநாடிகள் ஆகுது. 12 மணி அடிக்க எத்தனை விகாடிகள் ஆகும்?
யாழினி: : 60 விநாடிகள்.
உமா: இல்லை.
விஜி : 63 விநாடிகள்
உமா : கனகசபை, உனக்குத் தெரியுமா ?
கனகசபை: நீங்களே சொல்லிடுங்க அக்கா, உமா: ஒன்றுக்கும் ஆறுக்கும் உள்ள இடை வெளிகள் ஐந்து. ஐந்து இடை வெளிகளுக்கு 30 விநாடிகள் என்றால் ஒரு இடைவெளிக்கு எத்தனை விநாடிகள்?
விஜி: ஆறு விநாடிகள்.
உமா : அதே போலத்தானே ஒன்றுக்கும் 12க்கும் உள்ள இடைவெளிகளைத் தெரிந்து கொண்டு...
யாழினி: தெரியும்; தெரியும். பதினொரு இடை வெளிகள். ஒரு இடைவெளிக்கு 6 விநாடின்னா 11 இடைவெளிகளுக்கு 11 x 6 = 66 விநாடிகள்.
உமா: ஆம், சரியான விடை 66 விநாடிகள்தான்! இப்போது வேறொரு விதமான கேள்வி. ஒரு மேஜை மேல் ஒரு தட்டு இருந்தது. அந்தத் தட்டிலே 10 ஆரஞ்சுப் பழங்கள் இருந்தன. மேஜையைச் சுற்றி 10 குழந்தைகள் நின்றார்கள். அவர்கள் ஆளுக்கு ஒரு பழமாக எடுத்துக் கொண்டார்கள். அப்படியும் தட்டிலே ஒரு பழம் இருந்தது.
யாழினி: அது எப்படி இருக்க முடியும் ?
உமா : இருந்தது.
கனகசபை : நான் சொல்கிறேன். கடைசிக் குழந்தை, தனக்குச் சேரவேண்டிய பழத்தைத் தட்டோடு எடுத்துக் கொண்டது.
உமா : ரொம்ப சரி. இன்னொரு சுலபமான கணக்கு 4 மீட்டர் அகலம், 4 மீட்டர் நீளம், 4 மீட்டர் ஆழம் உள்ள குழியிலே எவ்வளவு மண் இருக்கும்?
விஜி ; இதோ சொல்றேன். 4 x 4 x 4... யாழினி ஏனக்கா, அந்தக் குழியிலே எவ்வளவு மண் இருக்கும்னுதானே கேட்டீங்க, மண் இருந்தால் அதை எப்படிக் குழின்னு கூற முடியும் ?
உமா : யாழினி, உண்மையிலேயே நீ கெட்டிக் காரிதான். இன்னொரு கேள்வி. நல்ல கோடைக் காலம், இரவு நேரம். மழை இல்லை. அந்த நேரத்தில் தூரத்திலே ஒரு ரயில் போகுது. அது பாசஞ்சர் ரயிலா, கூட்ஸ் ரயிலான்னு எப்படிக் கண்டு பிடிப்பீங்க?
யாழினி : மூசு மூசுன்னு திணறினால், அது கூட்ஸ் ரயில். சத்தம் குறைச்சலா யிருந்தால் பாசஞ்சர் ரயில்.
உமா: . இதைவிடச் சுலபமா ஒரு வழி இருக்கு
விஜி : எனக்குத் தெரியும்; எனக்குத் தெரியும்.
உமா : விஜி, தெரிந்தால் சொல்லேன்.
விஜி : கோடைக் காலம்; மழையும் இல்லை; இரவு நேரம், அதனாலே ஜனங்கள் போகிற வண்டியாயிருந்தால், ஒவ்வொரு பெட்டியிலும் ஜன்னல் திறந்திருக்கும். வரிசையாக வெளிச்சம் தெரியும். கூட்ஸ் ரயிலாயிருந்தால் அதிக வெளிச்சம் தெரியாது.
உமா : விஜி, நீ உண்மையிலே புத்திசாலிதான். மகாகவி பாரதியாரின் முதல் புத்தகம் எது தெரியுமா ?
விஜி: பாரதியார் கவிதைகள்.
உமா: இல்லை.
யாழினி : பாப்பாப் பாட்டு
உமா : அது புத்தகம் இல்லையே! அது ஒரு பாட்டுத்தான். அது 1915-ல் ஞானபானு என்ற இதழில் வெளிவந்தது. ஆனால், முதல் முதலாக வெளிவந்த பாரதியார் புத்தகம் 1908-ல் வெளிவந்தது. யாருக்குத் தெரியும் ?
எல்லாரும் : (மெளனம்)
உமா : சரி நானே சொல்லிவிடுகிறேன். ‘ஸ்வதேச கீதங்கள்’ என்பதுதான் அவரது முதல் புத்தகம், வந்தே மாதரம், மன்னும் இமயமலை, எந்தையும் தாயும், வாழிய செந்தமிழ், என்ற 14 பாடல்களைக் கொண்டது அந்தப் புத்தகம். சரி விஜி, ஆறுகளே இல்லாத நாடு எது ?
விஜி: ஏனக்கா, ஆறுகளே இல்லாமல்கூட ஒரு நாடு இருக்குமா?
உமா: இருக்கே, கனகசபை, உ ன க் கு த் தெரியுமா?
கனகசபை: ஆப்பிரிக்கா.
உமா : ஆப்பிரிக்காவா? அங்கேதான் பெரிய பெரிய ஆறுகளெல்லாம் இருக்கின்றன. உலகிலேயே மிக நீளமான நதி அங்குதானே இருக்கிறது ?
யாழினி: . அதன் பெயர் எனக்குத் தெரியும், நைல் நதிதானே?
உமா : ரொம்பச் சரி.
விஜி: ஆறுகள் இல்லாத நாடு ஆஸ்திரேலியாதான்.
உமா: ஆறு என்ற சொல் ஆ என்ற எழுத்திலே தொடங்குது. அதனாலே கனகசபையும் நீயும் 'ஆ' விலே தொடங்குகிற நாடாய்ப் பார்த்துச் சொல்கிறீர்களா? யாழினி, உனக்குச் சரியான விடை தெரியுமா?
யாழினி: இல்லே அக்கா, நீங்களே சொல் லிடுங்க.
உமா: ஆறுகளே இல்லாத நாடு அரேபியா தான்! அங்கே எங்கு பார்த்தாலும் பாறைகளும், மணலுமாகவே இருக்கும். மூன்று
புறமும் கடல் சூழ்ந்திருக்கும். ஆனால், ஆறு களே இல்லை... இப்போது அடுத்த கேள்வி. தாஜ் மஹாலைக் கட்டியவர் யார் ?
கனகசபை: கொத்தனார்கள்.
(விஜியும் யாழினியும் சிரிக்கிறார்கள்)
உமா : சிரிக்காதீர்கள், கனகசபை சொன்னதும் ஒரு வகையில் சரிதான். கட்டியவர் யார்?" என்று கேட்கக் கூடாது. கட்டுவித்தவர் யார்?' என்றுதான் கேட்க வேண்டும். சரி, தாஜ் மஹாலைக் கட்டுவித்தவர் யார் ?
யாழினி: ஷாஜஹான்.
உமா: ஆம், ஷாஜஹான்தான். ஷாஜஹானாபாத் என்று கேள்விப் பட்டிருக்கிறீர்களா?
கனகசபை : பகாளாபாத் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஷாஜஹானாபாத். ஏதாவது சாப்பிடுகிற சமாச்சாரமோ?
உமா : யாருக்கும் தெரியாதா? நானே சொல்லி விடுகிறேன். பழைய தில்லி நகரத்துக்கு
ஷாஜஹானாபாத் என்ற ஒரு பெயரும் உண்டு அதை உருவாக்கியவர், தாஜ்மஹாலைக் கட்டுவித்த அதே வடிாஜஹான்தான். கோழி முட்டையிலிருந்து குஞ்சு வெளிவர எத்தனை நாட்களாகும் ?
விஜி : 21 நாட்கள்.
உமா: சரியான விடை... கோழி அடை காக்காமலே முட்டையிலிருந்து குஞ்சு வெளிவர ஒரு கருவி இருக்கிறது. அதை யாராவது பார்த்திருக்கிறீர்களா?
யாழினி : நான் பார்த்திருக்கிறேன்.
கனகசபை : நானும்தான் ஒரு கோழி ப் பண்ணையில் பார்த்திருக்கிறேன். அதற்கு ஏதோ பெயர் சொன்னார்களே... உம், உம்... நினைவுக்கு வந்து விட்டது. incubator.
உமா : அடே, நல்லா ஞாபகம் வைத்திருக்கிறாயே! அடை காக்கும் பெட்டி என்று அதைத் தமிழில் சொல்லுவார்கள். அதில் மூட்டைகளை வைத்தால் எத்தனை நாட்களிலே குஞ்சு வெளி வரும், தெரியுமா?
விஜி : 21 மணி நேரத்தில்.
கனகசபை: இல்லை. அதுவும் 21 நாட்களில் தான் வெளிவரும்.
உமா : கனகசபை, நீ சொன்னதுதான் சரி. கோழி அடைகாத்தாலும் 21 நாட்கள்தான்.
அடை காக்கும் பெட்டியில் வைத்தாலும் 21 நாட்கள்தான்! அடுத்து ஒரு கேள்வி. உலகிலேயே மிகப் பெரிய சமுத்திரம் எது?
யாழினி: பசிபிக் மகா சமுத்திரம்.
உமா : அடே, யாழினி, நீ சரியாய்ச் சொல்லிட்டியே! இப்போதுதான் பள்ளிக்கூடத் திலே இந்தப் பாடம் நடக்குதோ?
யாழினி: இல்லை, இல்லை. இதை நான் இரண்டு வருஷத்துக்கு முன்னாலே படிச்சிருக்கேன்.
உமா: உன் ஞாபக சக்தி வாழ்க! இப்போது நான் உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு தாளும் பென்சிலும் தருவேன்.
ஒரு பூசணிக்காய்
ஒரு சாத்துக்குடி
இரண்டு வெண்டைக்காய்கள்
ஒரு புடலங்காய்
ஆறு கொத்தவரங்காய்கள்
இவற்றை வைத்து ஒரு படம் வரையனும். ஒரு பூனை முதுகுப் பக்கத்தைக் காட்டிக் கொண்டு உட்கார்ந்திருப்பது போல அந்தப் படம் இருக்கனும், எங்கே, வரைஞ்சு பாருங்கள்.
விஜி : எனக்குப் படமே போட வராது.
கனகசபை : நான் போட்டுப் பார்க்கிறேன்.
யாழினி: இதோ ஒரு நொடியிலே போட்டுக் காட்டுகிறேன்... இதோ, என் படம் எப்படியக்கா இருக்கு ?
(படம்)
உமா : அடடே, யாழினி எவ்வளவு ஜோரா வரைஞ்சிருக்கிறாள்! வருங்காலத்தில் பெரிய ஒவியராய் வரப்போகிறாள். இப்போது நான் ஒரு விடுகதை போடுவேன். இதற்கு விடை என்ன? அது எந்த நாட்டு விடுகதை என்று சொல்லனும். ’முண்டாசு கட்டின சின்னப் பையன் வீட்டுச் சுவரில் மோதினான்; வெளிச்சம் போட்டுச் செத்தான்'
கனகசபை : அது தீக்குச்சிதானே?.
உமா : ஆமாம். தீக்குச்சிதான். அது எந்த நாட்டு விடுகதை?
கனகசபை : அமெரிக்க நாட்டு விடுகதை,
உமா: இல்லை. பிரேஸில், சிலி, பெரு-இந்த மூன்று நாடுகளிலே ஒன்று.
விஜி ; சிலி
உமா : சரியான விடை. நூறு ஆண்டுகளுக்கு முன்பு நம் தமிழ் நாட்டில் சிலேட்டு கிடையாது. அப்படியானால் எதிலே எழுதிப் பழகியிருப்பார்கள் ?
யாழினி : மணலில்தான் எழுதிப் பழகியிருப் பார்கள்.
உமா : சரி, புத்தகம் கிடையாது. எதைப் பார்த்துப் படித்திருப்பார்கள் ?
கனகசபை: ஏட்டைப் பார்த்துப் படித்திருப் பார்கள்.
உமா : அதுவும் சரி. விஜி, அக்காலத்தில் பென்சில், பேனா கிடையாது. எதனால் எழுதியிருப்பார்கள் ?
விஜி : எழுத்தாணியால்.
உமா: ஆளுக்கு ஒரு விடை கூறிவிட்டீர்கள். சரி, கண்ணன் எங்கள் கண்ணனாம்; கார்மேக வண்ணனாம், என்ற பாட்டை இயற்றியவர் யார், தெரியுமா ?
கனகசபை: அது ஒரு நாடோடிப் பாடல். அதனால் பெயர் தெரியவில்லை.
யாழினி : கனகசபை சொன்னது தப்பு. எனக்குத் தெரியும், எங்கள் பள்ளி விழாவில் நானே
கண்ணன் வேஷம் போட்டு ஆடிப் பாடியிருக்கிறேன். குழந்தைக் கவிஞர் வள்ளியப்பா இயற்றியதுதான் இந்தப் பாடல்.
உமா : யாழினி கூறியதே சரி. இவ்வளவு நேரமாக நான் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் உங்களைச் சரியான விடை சொல்லச் சொன்னேன். ஆனால், இப்போது நான் நாலு கேள்விகள் கேட்பேன். நாலுக்கும் சரியான விடை சொல்லக்கூடாது. தப்பு தப்பா விடை சொல்லனும். எங்கே விஜி, நீயே நாலு கேள்விகளுக்கும் விடை சொல்லு. காக்கையின் நிறம் என்ன?
விஜி : சிகப்பு.
உமா : தமிழ் நாட்டின் தலைநகரம் எது?
விஜி : முடுக்குப்பட்டி,
உமா : நேரு மாமா எந்த ஊரிலே பிறந்தார்?
விஜி: அண்ணா நகரிலே.
உமா: சரி, இப்போ இதுவரை நான் எத்தனை கேள்விகள் கேட்டிருக்கிறேன்?
விஜி : மூனு.
உமா : ஐயையோ! தோத்துப் போயிட்டியே!
விஜி : என்ன, தோத்துப் போனேனா!
உமா : ஆமாம், நான் நாலு கேள்விகள் கேட்பேன்; நாலுக்கும் தப்பு தப்பா விடை சொல்லனும்: என்றேன். முதல் மூனுக்கும் தப்பா விடை சொன்னாய், ஆனால், நாலாவது கேள்வி என்ன? இப்போ இதுவரை நான் எத்தனை கேள்விகள் கேட்டிருக்கிறேன்' என்பது தானே? அதற்கும் நீ தப்பு விடைதானே சொல்லனும்? சரியான விடையைச் சொல் லிட்டியே..அதனாலே
கனகசபை: ஆமாம்; விஜி தோத்துப் போயிட்டா
யாழினி: விஜி தோத்துப் போகல்லே, ஏமாந்து போயிட்டா
(எல்லாரும் சிரிக்கிறார்கள்.)
இடம் : சென்னை அரும்பாக்கம்
கேள்வி கேட்பவர் : எஸ். சரளா
பங்கு கொள்வோர் :
ஆர். கிரி. ஆர். பிரிதி, ஏ. பிரின்ஸ்,
சரளா : தேசபக்தர் திருப்பூர்க் குமரன் பிறந்த ஊர் எது?
பிரீதி: அவர் பெயருக்கு முன்னால்தான் ஊர் இருக்கிறதே! திருப்பூர்தான்.
சரளா: இல்லை. திருப்பூரில் அவர் கொடி பிடித்துச் சென்றபோது, அடிபட்டு உயிர்த் தியாகம் செய்ததால், திருப்பூர்க் குமரன் என்கிறார்கள். ஆனால், அவர் பிறந்த ஊர் வேறு.
கிரி: எனக்குத் தெரியும். அவர் பிறந்தது... பிறந்தது, என்னவோ ஒரு மலை. தலைமலை...இல்லை, இல்லை. தலைக்கு இன்னொரு பெயர் சொல்வார்களே,...ம் நினைவு வந்து விட்டது: சென்னிமலை, அவர் பிறந்தது சென்னிமலை என்ற ஊரில் தான்.
சரளா : அப்பா! எப்படியோ சரியாகச் சொல்லி விட்டாய். சரி, பாரத ரத்னா’ எந்த ஆண்டிலிருந்து வழங்கப்படுகிறது?
பிரின்ஸ் : 1954-ஆம் ஆண்டிலிருந்து.
சரளா: சரியான விடை முதல் ஆண்டிலே யார் யாருக்குப் ’பாரத ரத்னா’ விருது வழங்கினார்கள்? பிரின்ஸ்: ராஜாஜிக்கு சரளா : அவர் ஒருவருக்குத்தானா? இன்னும் இருவருக்கும் வழங்கப்பட்டதே, அவர்களின் பெயர்கள் தெரியுமா?
கிரி : டாக்டர் ராதாகிருஷ்ணன்.
சரளா : அதுவும் சரி, இன்னொருவர் நோபல் பரிசு பெற்றவர்...என்ன, இன்னுமா தெரிய வில்லை?
பிரிதி : தெரியும், தெரியும். சர்.சி.வி. ராமன்.
சரளா ! எப்படியோ மூன்று பேரும் ஆளுக்கு, ஒரு தலைவர் பெயரைச் சொல்லிவிட்டீர்கள். இந்தியாவிலே முதன் முதலாகத் தயாரிக்கப் பட்ட செயற்கைக் கிரகம் எது?
பிரின்ஸ் : ஆரியபட்டா.
சரளா கரெக்ட். இலங்கையிலே ஒர் ஆறு. இருக்கிறது. அது கங்கை என்ற பெயருடன் முடியும். அதன் முழுப் பெயர் தெரியுமா?
எல்லோரும் : (மெளனம்).
சரளா : ஒருவருக்கும் தெரியவில்லையா? சரி, நானே சொல்லிவிடுகிறேன். அதன் பெயர் மகாவலி கங்கை. இப்போது நான் ஒரு விடுகதை போடப் போகிறேன்.
கால் உண்டு; நடக்கமாட்டான்.
கை உண்டு, மடக்க மாட்டான்.
முதுகு உண்டு; வளைக்க மாட்டான். அவன் யார்?
கிரி: சட்டை. சரளா : சட்டைக்குக் கால் உண்டா? பிரீதி : நான் சொல்கிறேன். நாற்காலி!
சரளா: பிரிதி சரியாகச் சொல்லிவிட்டாள். சோவியத் ரஷ்யாவின் தந்தை என்று போற்றப்படுகிறவர் லெனின் என்பது உங்களுக்குத் தெரியும். அவருக்கு அவருடைய பெற்றோர் இட்ட பெயர் தெரியுமா?
கிரி : எனக்குத் தெரியும். முந்தாம் நாள்தான் லெனினின் இளமைப் பருவம்' என்ற புத்தகத்தைப் படித்தேன். விளாடிமிர் இலீயச் உலியனாவ்.
சரளா : அடேயப்பா! நன்றாக இவ்வளவு நீளப் பெயரை நினைவு வைத்திருக்கிறாயே! ஜைன மதம், சமண மதம் இரண்டிற்கும் என்ன வித்தியாசம்? பிரின்ஸ் : வித்தியாசமா? இரண்டும் ஒன்று தானே?
சரளா: அடே பிரின்ஸ் எவ்வளவு சரியாகச் சொல்லி விட்டான்! இதோ இந்தப் படத்தைப் பாருங்கள். இவர் யார் என்று தெரிகிறதா?
எல்லோரும் : (மெளனம்)
சரளா : இவர்தான் நம் தேச விடுதலைப் போரில் ஈடுபட்ட புரட்சி வீரர்! 24 வயதிலே ஆங்கில அரசாங்கத்தாரால் தூக்கிலிடப்பட்ட பகத்சிங் இவருடன் இரண்டு இளைஞர்களும் துக்கிலிடப்பட்டார்கள். அவர்களின் பெயர்கள் தெரியுமா?
எல்லாரும். (மெளனம்)
சரளா ! உங்களில் யாருக்கும் தெரியாதா? சேச்சே, நம் தேச விடுதலைக்காக உயிரைக் கொடுத்த அந்த உத்தமர்களை நாம் மறக்கலாமா? பகத்சிங்குடன் தூக்கிலிடப்பட்ட
அவர்களில் ஒருவர் பெயர் சுகதேவ், மற்றொருவர் பெயர் ராஜகுரு. நம் உடம்பின் எடையிலே எத்தனை சதவிகிதம் இரத்தம் இருக்கிறது? சொல்ல முடியுமா?
கிரி : 12-ல் ஒரு பங்கு
சரளா : நான் சதவிகிதத்தில் கேட்டேன். பரவாயில்லை. உடம்பின் எடையில் கிட்டத்தட்ட 8 சதவிகிதம் இரத்தம் இருக்கிறது...விதை யில்லாப் பழங்கள் என்னென்ன?
பிரிதி : வாழைப்பழம்.
சரளா: சரிதான் சிலவகை திராட்சை, கிச்சிலியிலும் விதை இருப்பதில்லை. இப்போது நான் ஒரு பாட்டின் ஆரம்பத்தில் உள்ள இரண்டு வரிகளைச் சொல்கிறேன். உடனே பாட்டை எழுதியவர் யார் என்று சொல்லிவிட வேண்டும். எங்கே பார்க்கலாம்?
கொல்லையிலே கொய்யாப்பூ-அது
கொண்டையிலே வையாப்பூ.
பிரின்ஸ் : கவிஞர் கண்ணதாசன், சரளா இல்லை.
கிரி : பாரதிதாசன்.
சரளா: சரியாக விடை சொன்னாய்... செவ்விந்தியர்கள் என்கிறார்களே, அவர்களுக்கும் இந்தியர்களாகிய நமக்கும் ஏதாவது தொடர்பு உண்டா?
பிரீதி : இல்லை.
சரளா : பிறகு ஏன் அவர்களைச் செவ்விந்தி யர்கள் என்று அழைக்கிறார்கள்?
பிரீதி : நான் படித்திருக்கிறேன். இந்தியாவுக்கு வழி கண்டுபிடிக்கக் கடலிலே சென்றாரே கொலம்பஸ், அவர் அமெரிக்காவின் கரையைக் கண்டதும், அதுதான் இந்தியா என்று நினைத்து விட்டாராம்! உடனே, அங்கிருந்த பழங்குடி மக்களுக்கு இந்தியர்கள்’ என்று பெயரும் வைத்து விட்டாராம்.
சரளா: நன்றாக, விளக்கமாகச் சொன்னாய். அதுமுதல் அந்த மக்களை ‘செவ்விந்தியர்’ என்றும், ‘அமெரிக்க இந்தியர்கள்’ என்றும் அழைத்து வருகிறார்கள்... ‘கஸ்தூரி’ என்ற வாசனைப் பொருள் எங்கிருந்து எப்படிக்கிடைக்கிறது?
கிரி: கஸ்தூரி மானிடமிருந்து கிடைக்கிறது,
சரளா: அதுசரி, எப்படி அதனிடமிருந்து கிடைக்கிறது என்பதற்குப் பதில் சொல்ல வில்லையே?
கிரி : மானின் அடி வயிற்றுக்கு அருகிலுள்ள பகுதியிலிருந்துதான் ‘கஸ்தூரி’யை எடுக்கிறார்கள்.
சரளா : ரொம்ப சரி, ஆங்தையால் மனிதருக்கு நன்மையா? தீமையா?
பிரின்ஸ் : ஆந்தையைப் பார்த்தால் துரதிர்ஷ்டம் என்கிறார்கள்.
சரளா : அதெல்லாம் தவறான கருத்து. நமக்கு ஆந்தை நன்மை செய்கிறதா? தீமை செய்கிறதா?
பிரீதி : நன்மைதான்.
சரளா: எப்படி?
பிரீதி: அது பகலெல்லாம் மரப்பொந்திலே இருந்துவிட்டு, இரவிலே வெளியில் வரும். அப்போது பயிர்களை அழிக்கிற எலிகளையும் பூச்சிகளையும் பிடித்துத் தின்கிறது. ஆகையால், அது நமக்கு நன்மைதானே செய்கிறது?
சரளா: ஆம் நன்றாகச் சொன்னாய்... இதோ இந்தப் படத்தைப் பாருங்கள். நன்றாகப் பாருங்கள்....
நமக்கு இடதுபுறம் உள்ளது மத்தியப் பிரதேசம். வலது புறம் உள்ளது மேற்கு வங்காளம். நடுவே இருக்கும் மாநிலம் எது?
எல்லாரும் : ஒரிசா.
சரளா: அடே, எல்லாரும் புவி இயலில் கெட்டிக் காரர்கள்போல் தெரிகிறதே! அடுத்த கேள்வி. இராஜபாளையத்தில் பிறந்த ஒருவர் தமிழகத்தின் முதல்வராக இருந்திருக்கிறார். அவர் பெயர் தெரியுமா?
கிரி : குமாரசாமி ராஜா.
சரளா: சரியான விடை அவர் தமது பெரிய வீட்டையே பொது மக்களுக்குக் கொடுத்து விட்டார். காந்தி கலைமன்றம்' என்ற பெயரால் இப்போது அது வழங்கப்படுகிறது. காந்திஜிக்கு மிகவும் பிரியமான பாட்டு எது, தெரியுமா?
பிரீதி : வைஷ்ணவ ஜனதோ தேனே கஹியே’ என்று ஆரம்பமாகுமே, அந்தப் பாட்டுத்தான். சரளா சரியாகச் சொன்னாய்! இந்தப் பாட்டை எழுதியவர் யாரென்று தெரியுமா?
எல்லாரும் : (மெளனம்). சரளா பதினைந்தாம் நூற்றாண்டிலே குஜராத்தில் வாழ்ந்த நரசிம்ம மேத்தா என்ற தெய்வீகக் கவிஞர்தான் இதை இயற்றினார்.
காந்திஜியின் உயர்ந்த கொள்கைகளெல்லாம் அந்தப் பாடலிலே இருந்ததால், காந்திஜியை அது மிகவும் கவர்ந்துவிட்டது. பொய்க்கால் குதிரையாட்டத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள். தமிழ் நாட்டைத் தவிர வேறு. எங்கேயாவது இந்த ஆட்டம் இருக்கிறதா?
பிரீதி : டில்லியில் பொய்க்கால் குதிரை ஆட்டம் நடந்ததாம். பத்திரிகையிலே படித்தேன்.
பிரின்ஸ் : பெங்களுரில்கூட இந்த ஆட்டம் இருக்கிறதாக என் மாமா சொன்னார்.
சரளா: தமிழ்நாட்டிலிருந்துதான் அங்கெல்லாம் போயிருக்கிறது. இந்த ஆட்டம் நம் தமிழ் நாட்டுக்கே உரியது. ......'மைதிலி என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
பிரிதி : என் சிநேகிதி ஒருத்திக்குக்கூட அந்தப்பெயர்தான்.
சரளா: நான் சொல்வது ஒரு பெண்ணின் பெயரல்ல; ஒரு மொழியின் பெயர். அது பீகார் மாநிலத்திலே மிதிலைப் பகுதியிலே பேசப்படுகிறது. வடஇந்தியாவிலே முதல் முதலாக, பைபிளை மொழி பெயர்த்தது இந்த மைதிலி மொழியில்தானாம்!
* இடம் : இராஜபாளையம்
கேள்வி கேட்பவர் : மு. சிவம்
பங்கு கொள்வோர் :
முத்துக்குமார், தங்கமாரி, ஜோதி
சிவம் : அன்புள்ள முத்துக்குமார், தங்கமாரி, ஜோதி, சிங்கம் ஒரு தடவையில் எத்தனை குட்டிகள் போடும்? உங்களுக்குத் தெரியுமா?
ஜோதி : ஒன்றே ஒன்று.
சிவம் : இல்லை.
ஜோதி : சிங்கம் ஒரு குட்டி, பன்றி பல குட்டி என்று ஒரு பழமொழிகூட இருக்கிறதே, அண்ணா!
சிவம் : அந்தப் பழமொழி தவறு. ஒரே ஈற்றில் சிங்கம் இரண்டு அல்லது மூன்று குட்டிகள் கூடப் போடும். மிருகக் காட்சி சாலையில் இருக்கும் சிங்கம் நான்கு ஐந்து குட்டிகள் கூடப் போடும். உணவு தேடி அலையாமல் எந்த விதமான ஆபத்தும் இல்லாமல் இருக்கிறதல்லவா அது? அதனால் அது அதிகக் குட்டி களைப் போடுகிறது.
சிவம் : நீங்கள் சர்க்கஸ் என்றால் ஆவலாகப் பார்க்கிறீர்கள். முதன் முதலாக சர்க்கஸ் காட்சிகளை நடத்தியவர்கள் யார் தெரியுமா?
முத்து : ஆங்கிலேயர்.
சிவம் இல்லை.
தங்கம் : கிரேக்கர்கள்.
சிவம் : அவர்களும் இல்லை. ஜோதி! உனக்குத் தெரியுமா?
ஜோதி: தெரியவில்லையே அண்ணா.
சிவம்: ரோமானியர்கள்தான். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சர்க்கஸ் காட்சிகளை நடத்தினார்கள். அப்போது நாம் இப்போது பார்ப்பது போல் பல்வேறு வித்தைகள் இல்லை. மல்யுத்தமும் குதிரை மேல் ஏறிச் சவாரி செய்யும் வித்தைகளுமே நடை பெற்றன. பிறகு, இங்கிலாந்தில் சர்க்கஸ் பரவியது. நம் நாட்டில் கழைக்கூத்தாடிகள் தெருக்களில் பல வித்தைகளைச் செய்து காட்டி வந்தார்கள். ஆனாலும், ஆங்கிலேயர் நம் நாட்டுக்கு வந்த பிறகுதான் நம் நாட்டிலும் சர்க்கஸ் ந்டத்த ஆரம்பித்தார்கள். இப்போது நால்வரைப் பற்றி ஒரு கேள்வி.
முத்து நம் நால்வரைப் பற்றியா?
சிவம் : இல்லை, இல்லை. சைவசமய ஆசார்யர்கள் நால்வர் என்கிறார்களே. அவர்கள் யார், யார் என்று தெரியுமா?
முத்து : அண்ணா! நான் சொல்கிறேன். அப்பர், சுந்தரர், மாணிக் கவாசகர், அப்புறம், அப்புறம்...
தங்கம் : இன்னொருவர் பெயர் எனக்குத் தெரியும், அவர்தான் திருநாவுக்கரசர்.
சிவம் : தப்பு. அப்பரும் திருநாவுக்கரசரும் ஒருவரேதான். ஜோதி, உனக்குத் தெரியுமா?
முத்து : நானே சொல்லிவிடுகிறேன். அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர்.
சிவம்: சரியாகச் சொல்லிவிட்டாய், ஆமாம், திருநாவுக்கரசருக்கு அப்பர்' என்ற பெயர் எப்படி வந்தது? உங்களில் யாருக்காவது தெரியுமா?
மூவரும் : தெரியாது அண்ணா. நீங்களே சொல்லி விடுங்கள்.
சிவம் : சீர்காழிக்குப் போய்த் திருஞான சம்பந்தரைத் திருநாவுக்கரசர் சந்தித்தார்.
அப்போது திருஞானசம்பந்தர், அப்பரே!' என்று அவரை அழைத்தார். அது முதல் எல்லோரும் அவ்வாறே அழைத்தார்கள்.
துறைமுகங்களில், இயற்கைத் துறைமுகம், செயற்கைத் துறைமுகம் என்று இரு வகை உண்டு. சென்னைத் துறைமுகம் இயற்கைத் துறைமுகமா, செயற்கைத் துறைமுகமா ?
தங்கம் : இயற்கைத் துறைமுகம்தான்.
சிவம் : இல்லை.
ஜோதி: செயற்கைத் துறைமுகம்தான்.
சிவம் : ஆண் குழந்தை இல்லையென்றால் பெண் குழந்தைதானே! இயற்கைத் துறைமுகம் இல்லை என்றேன். உடனே செயற்கைத் துறைமுகம் என்று சொல்லிவிட்டாய். கெட்டிக்காரிதான்.
சரி...பறவை இனங்களில் பெண் பறவை முட்டை இட்டாலும் ஆண் பறவை, பெண் பறவை இரண்டுமே அடைகாக்கும் ஆனால், ஆண் பறவை மட்டுமே அடைகாக்கும் இனம் ஒன்று உண்டு. அது எந்தப் பறவை என்று சொல்ல முடியுமா?
முத்து : மயில்.
சிவம் : இல்லை.
தங்கம் : நெருப்புக் கோழி.
சிவம் : அதுவும் இல்லை.
ஜோதி : எனக்குத் தெரியும். பெங்குவின்.
சிவம் : கரெக்ட். ஆண் பெங்குவின் எட்டு வாரங்கள் எதுவுமே சாப்பிடாமல் அடை காக்கும்.
அடுத்ததாக ஒரு கேள்வி. மக்கா, மதினா என்ற இரு நகரங்களும் எந்த எந்த நாட்டில் உள்ளன? ஏன் அவற்றைப் புண்ணிய நகரங் களாகக் கருதுகிறார்கள்?
தங்கம் : இரண்டுமே ஒரே நாட்டில் - அரேபியாவில்தான் இருக்கின்றன. நபிகள் நாயகம் பிறந்தது மக்காவில்;காலமானது மதினாவில்.
சிவம் : தங்கமாரி! நீ மிகவும் சரியாகச் சொல்லி விட்டாய்,
ஆமையைப் பற்றி ஒரு கேள்வி. உங்கள் பதிலும் ஆமையைப் போல் மிக மிக மெதுவாக வரக்கூடாது. ஆமைக்கு எத்தனை பற்கள்?
சிவம் : தவறு.
தங்கம் : 28.
சிவம் : ஜோதி, நீ எத்தனை என்று சொல்லப்போகிறாய்? 24 என்றா?
ஜோதி : இல்லை அண்ணா. எனக்கும் தெரியாது.நீங்களே சொல்லிவிடுங்கள்.
சிவம் : ஆமைக்குப் பற்களே இல்லை! ஆனால், அதன் தாடைகளே நன்றாகத் தடித்துப் பற்களைப் போல் உதவுகின்றன. நான் இப்போது ஒரு தலைவரைப் பற்றிக் கேட்கப் போகிறேன். 14-வது வயதிலே பத்திரிகை நடத்தியவர் பாரதத்தின் கல்வி அமைச்சராக பத்து ஆண்டுகள் இருந்தார். அவர் பெயர் என்ன ?
முத்து: மெளலானா அபுல் கலாம் ஆஸாத்.
சிவம்: சபாஷ்! இவ்வளவு சரியாகச் சொல்லி விட்டாயே! சரி, உலகிலே மிகச் சிறிய, கண்டம் எது? மிகப் பெரிய தீவு எது?
ஜோதி: இரண்டும் ஒன்றுதான். அது ஆஸ்திரேலியாக் கண்டம்தான்.
சிவம் : வெரி குட் சரியாகச் சொன்னாய்...... தென்னிந்தியாவில் ஒரு பெரிய தெப்பக்குளம் இருக்கிறது. அது எங்கே என்று தெரியுமா?
முத்து: வேலூரில்.
சிவம் : இல்லை.
தங்கம் : மதுரையில்.
சிவம் : தங்கமாரி சொன்னதுதான் சரி. 17ஆம் நூற்றாண்டில் திருமலை நாயக்க மன்னர் மதுரையிலே திருமலை மஹால் என்னும் ஒரு பெரிய அரண்மனை கட்டுவதற்கு மண் தோண்டச் செய்தார். மண் தோண்டிய இடத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டது. அவர் அதைத் தெப்பக்குளமாக மாற்றிவிட்டார்.
இப்போது சாலை விதிகளைப் பற்றி ஒரு கேள்வி. வலது புறம் திரும்பக் கூடாது என்பதற்குப் பலகையில் எப்படிப் படம் போட்டிருக்கிறார்கள்? வரைந்து காட்ட முடியுமா?
முத்து : சைக்கிளில் போகும்போது அடிக்கடி பார்ப்பேன். ஆனால் வரைந்து காட்டத் தெரியாதே!
சிவம் : இதோ நான் வரைந்து காட்டுகிறேன். நீ பார்த்தது சரிதானா, சொல்.
முத்து: சரிதான் அண்ணா.
சிவம் : மாடம் கியூரி என்ற பெயரைக் கேள்விப் பட்டிருப்பீர்கள். இவர் இரு முறை நோபல் பரிசு பெற்ற பெண்மணி. முதல் தடவை பெளதிகத்திற்கான நோபல் பரிசை மாடம் கியூரியும், அவர் கணவர் பியர் கியூரியும் சேர்ந்து பெற்றார்கள். இரண்டாம் தடவை ரசாயனத்துக்கான நோபல் பரிசை மாடம் கியூரி பெற்றார். அப்பா, அம்மாவைப் போலவே அவர்களின் மகளும், மாப்பிள்ளையும் சேர்ந்து நோபல் பரிசு பெற்றார்கள். இவர்கள் பெயர் தெரியுமா ?
மூவரும் : தெரியாது அண்ணா.
சிவம் : சரி. நானே சொல்கிறேன். மாடம் கியூரியின் மகள் பெயர் ஐரீன் கியூரி. மாப்பிள்ளையின் பெயர் ழாலியோ கியூரி. செயற்கை முறையில் கதிரியக்கத்தை
உண்டாக்கும் வழியைக் கண்டு பிடித்ததற்காக இருவருக்கும் 1985ல் நோபல் பரிசு வழங்கப்பட்டது. சரி, கதர்த் துணி என்றால் என்ன ?
முத்து:என்னண்ணா இது, இதுகூடவா தெரியாது: கையினால் நூற்று நெய்த துணிதான் கதர்த் துணி.
சிவம் : முத்துக்குமார், நீ என்ன சொன்னாய்? கையினால் நூற்று என்றது சரி. அப்புறம் நெய்த துணி என்றாயே, அப்படி என்றால் என்ன?
முத்து : ஆமாண்ணா, கையினாலேயே நெய்த துணி என்றும் சொல்லியிருக்க வேண்டும்.
சிவம் : ஆமாம், கையினாலேயே நூற்றுக் கையினாலேயே நெய்த துணிதான் கதர்...சரி, கடல் குதிரையை யாராவது பார்த்திருக்கிறீர்களா?
தங்கம் : கடல் குதிரையா! நாங்கள் நிலக் குதிரையைத்தான் பார்த்திருக்கிறோம்.
ஜோதி: நான் பார்த்ததில்லை. ஆனாலும் கேள்விப்பட்டிருக்கிறேன் அது கடலில் இருக்கும் ஒரு வகைப் பிராணி. மீன் இனத்தைச் சேர்ந்ததுதானே அண்ணா?
சிவம்: சரியாகச் சொன்னாய் ஜோதி. மீன் இனத்தைச் சேர்ந்தாலும், இது பார்ப்பதற்கு
மீனைப் போல் இருக்காது. முகம் குதிரையைப் போல் இருக்கும். நிமிர்ந்து நின்றபடி நீங்தும்.
இப்போது ஒரு கவிஞரைப் பற்றிக் கேட்கப் போகிறேன். முத்துப் பாடல்கள் என்று உங்களுக்காகவே வெளிவந்துள்ள புத்தகத்தை எழுதியவர் யார்?
முத்து: பெ. துரன்.
சிவம் : இல்லை.
ஜோதி : தேசிகவிநாயகம் பிள்ளை.
சிவம் : அவரும் இல்லை.
தங்கம் : மயிலை சிவமுத்து.
சிவம் : மிகவும் சரி. மாணவர் மன்றம்' என்ற மிகவும் புகழ்பெற்ற மன்றத்தை ஏற்படுத்தி அதன் தலைவராகவும் இருந்தவர் அவர். உங்களுக்காகவே வாழ்ந்த ஒரு பெரியவர். Chess என்று சொல்லுகிறோமே சதுரங்கம், அது எந்த நாட்டில் முதலில் தோன்றியது?
முத்து : நம் நாட்டில்தான்.
சிவம் : கரெக்ட். கி. பி. 6ஆம் நூற்றாண்டில் நம் இந்தியாவில் தோன்றி அது பாரசீகத்திற்குப் போனது. அங்கிருந்து பல நாடு களுக்கும் பரவி, இப்போது உலக ஆட்டம் ஆகிவிட்டது. சந்திர மண்டலத்தைப் பற்றி
இப்போது கேட்கப் போகிறேன். முதன் முதலாகச் சந்திர மண்டலத்திற்குச் சென்றவர்கள் எந்த நாட்டினர் ?
தங்கம் : அமெரிக்காவைச் சேர்ந்த மூன்று பேர் முதன் முதலாகச் சென்றார்கள்.
சிவம்: நீ சொன்னது சரிதான். கடைசியாக ஒரு கேள்வி. நான்கு பேருக்கு ஒரு சமையல் காரரால் ஒரு மணி நேரத்தில் சமையல் செய்ய முடிகிறது. அதே நாலு பேருக்கு ஒரே நிமிஷத்தில் சமைக்க வேண்டுமானால், எத்தனை சமையற்காரர்கள் வேண்டும்?
ஜோதி: அறுபது
(முத்துவும் தங்கமும் சிரிக்கிறார்கள்.)
ஜோதி: ஏன் சிரிக்கிறீர்கள்?
முத்து : ஜோதி சொன்னது, கணக்குப்படி சரிதான். ஆனால், சமையல் ஆகுமோ?
சிவம்: எப்படி ஆகும் 60 பேரும் வந்து நின்றாலே ஒரு நிமிஷம் ஓடிப் போய்விடுமே! அடுப்பு எரிய வேண்டாமா? அரிசி வேக வேண்டாமா?
எல்லோரும் : ஆமாம், ஆமாம்.
(சேர்ந்து சிரிக்கிறார்கள்.)
இடம் : சென்னை, தேனாம்பேட்டை
கேள்வி கேட்பவர் : இரத்தின குமாரி
பங்கு கொள்வோர் : சத்திய நாராயணன் (சதீஷ்), விஜி, ஆரோக்கிய ரவி (ரவி)
இரத்தின குமாரி: ஒரே ஆண்டில், ஒரே மாதத்தில் ஒரே தேதியில் இரண்டு இந்தியப் பெரியார்கள் பிறந்தார்கள். அவர்கள் யார், யார் தெரியுமா ?
ரவி : காங்தித் தாத்தாவும், ல்ால்பகதூர் சாஸ்திரியும்.
இரத்தின: இல்லை. இருவரும் ஒரே மாதத்தில் ஒரே தேதியில்-அதாவது அக்டோபர் இரண்டாம் தேதி பிறந்தார்களே தவிர, ஒரே ஆண்டில் பிறக்கவில்லை.
உ.ம்...தெரியவில்லையா ? அவர்களில் ஒருவர் பெரிய கவிஞர்; இன்னொருவர் நேரு மாமாவின் குடும்பத்தைச் சேர்ந்தவர்.
விஜி : எனக்குத் தெரியும். ரவீந்திரகாத தாகூர்; இந்திரா காந்தி.
இரத்தின: விஜி சொன்னதில் முதல் பெயர் சரிதான். இரண்டாவது பெயர் தவறு.
சதீஷ் : கேரு மாமாவின் அப்பா பண்டித மோதிலால் நேருதானே ? இரத்தின : அவரே தான் ! தாகூரும் பண்டித மோதிலாலும் 6-5-1861ல் பிறந்தார்கள். ...வேகமாக நடக்கும் போட்டியைப் பார்த்திருப்பீர்கள்.
ரவி : டெலிவிஷனில் அடிக்கடி பார்க்கிறோமே.
இரத்தின : அப்படியா ? அப்போட்டியில் முக்கிய மான நிபந்தனை எது, தெரியுமா ?
சதீஷ் : ஒடக் கூடாது.
இரத்தின: ஓடினால்தான் அது நடைப் போட்டியாக இருக்காதே ! நடக்கிறார்களா , ஒடுகிறார்களா என்பதை எப்படித் தெரிந்து கொள்வது ?
ரவி : போட்டியில் கலந்துகொள்பவர்களின் பாதங்களை நான் கவனமாகப் பார்த்திருக்கிறேன். ஏதாவது ஒரு பாதம் எப்போதும் தரையைத் தொட்டுக் கொண்டே இருக்கிறது.
இரத்தின : ரவி சொன்ன மாதிரி, இரண்டு பாதங்களில் ஒன்று எப்போதும் தரையைத் தொட்டுக் கொண்டே இருக்க வேண்டும். இதுதான் முக்கியமான விதி.
...சரி, நீங்கள் வான வில் இருக்கும்
திசையைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது, சூரியன். எந்தப் பக்கத்தில் இருக்கும் ?
விஜி : எனக்குப் பின் பக்கத்திலே இருக்கும்.
இரத்தின : கரெக்ட்.
...ஒரு நாட்டின் பெயரைத் தமிழில் மொழி பெயர்த்தால் உதய சூரியன்' என்று வரும். அந்த நாட்டை நாம் எப்படி அழைக்கிறோம் ? அந்த நாட்டுக்காரர்கள் எப்படி அழைக் கிறார்கள்?
ரவி : ஜப்பான் என்று நாம் அழைக்கிறோம். நிப்பன் என்று அவர்கள் அழைக்கிறார்கள்.
இரத்தின : அடடே, ரவி ரொம்பச் சரியாகக் சொல்லிவிட்டானே!....
...அடுத்தது குரங்கைப் பற்றிய கேள்வி. ...குரங்குகளில் பல வகை உண்டு. சில வகைகளின் பெயர்கள் உங்களுக்குத் தெரிந் திருக்கலாம். சொல்லுங்கள், பார்க்கலாம்.
விஜி: கொரில்லாக் குரங்கு, சிம்பான்ஸிக் குரங்கு, நாய்க் குரங்கு, கிப்பன் குரங்கு... அப்புறம் அப்புறம்.
ரவி : நாமக் குரங்கு.
இரத்தின : நீ சொல்ற நாமக் குரங்கும், விஜி சொன்ன நாய்க் குரங்கும் ஒன்றுதான்.
ரவி : அப்படியா, சரி, கருங்குரங்கு, அனுமன் குரங்கு, துதிக்கை மூக்குக் குரங்கு
சதீஷ் : இன்னும் இருக்குதே குல்லாக் குரங்கு, சிலந்திக் குரங்கு, அணில் குரங்கு.
இரத்தின : போதும், நிறையச் சொல்லிவிட்டீர்கள். இன்னொரு கேள்வி. குழந்தைகளுக்கு எழுதுவோர் சேர்ந்து சென்னையில் ஒரு சங்கம் வைத்திருக்கிறார்களே, அதன் பெயர் தெரியுமா?
விஜி: ஒ, தெரியுமே. குழந்தை எழுத்தாளர் சங்கம். அதன் 31வது ஆண்டு விழாவைக் கூடச் சமீபத்தில்தான் கொண்டாடினார்களே!
இரத்தின: பேஷ், ஆண்டு விழா நடந்ததைக் கூட நினைவில் வைத்திருக்கிறாயே!
... புகையிலையில் ஒருவித நஞ்சு இருக்கிறது. அதன் பெயர் தெரியுமா?
ரவி : நிக்கோடின்.
இரத்தின : கரெக்ட்! அளவுக்கு அதிகமாகப் புகையிலையை உபயோகிப்பவர்களுக்கும், சுருட்டு சிகரெட்டுப் பிடிப்பவர்களுக்கும் புற்று நோய் உண்டாவதற்குக் காரணம், இந்த நஞ்சுதான் என்கிறார்கள்.
அடுத்த கேள்வி. நம் நாட்டின் தேசியப் பறவை மயில். இது உங்களுக்குத் தெரியும். தேசிய மிருகம் எது ?
விஜி : சிங்கம்.
சதீஷ் : இல்லை, புலிதான்.
இரத்தின : சதீஷ் சொன்னதுதான் சரி. ...நம் முதல் குடியரசுத் தலைவர் யார்? அவர் எத்தனை ஆண்டுகள் குடியரசுத் தலைவராக இருந்தார், தெரியுமா ?
விஜி ; ராஜேந்திர பிரசாத். அவர் 10 வருடங்கள் குடியரசுத் தலைவராக இருந்தார்.
இரத்தின : இராஜேந்திர பிரசாத் என்று விஜி சொன்னது சரிதான். ஆனால் 10 ஆண்டுகள் என்பது தவறு. அவர் 12 ஆண்டுகள் குடியரசுத் தலைவராக இருந்தார்.
இப்போது நான் ஒரு பொன்மொழி ;சொல்கிறேன் : அகிம்சை கோழையின் ஆயுதமல்ல: அது விரனின் ஆயுதம்' இதைச் சொன்னவர் யார்?
விஜி : காந்தித் தாத்தாதானே?
இரத்தின : அகிம்சை என்றவுடனே காந்தித் தாத்தா நினைவு வராமல் இருக்குமா? அதனால்தான் விஜி சரியாகச் சொல்லி விட்டாள்...... UNESCO என்கிறோமே, அந்த நிறுவனத்தின் முழுப் பெயர் என்ன?
சதீஷ் : United Nations Educational, Scientific and Cultural Organisation.
இரத்தின : ரொம்ப சரி. அதை ஐக்கிய நாடுகளின் கல்வி, விஞ்ஞான பண்பாட்டுக் கழகம் என்று தமிழில் கூறலாம்... ஆமாம், அதன் தலைமை அலுவலகம் எங்கே இருக்கிறது?
சதீஷ் : லண்டனில்.
ரவி: இல்லை, பாரிசில்.
இரத்தின : ரவி சொன்னதே சரி. அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர், ஆகிய மூவரும் சிவபெருமானைப் பற்றிப் பாடிய நூலின் பெயர் என்ன?
சதீஷ் : தேவாரம்.
இரத்தின: சரியான பதில்...நம் பாரத நாடு விடுதலை பெற்றபோது மைசூர், பரோடா, திருவாங்கூர், புதுக்கோட்டை என்று பல சுதேச சமஸ்தானங்கள் இருந்தன. அப்படி மொத்தம் எத்தனை சமஸ்தானங்கள் இருந்தன என்று கூற முடியுமா?
ரவி : 552.
இரத்தின : அடே, சரியாகச் சொல்லி விட்டாயே!
...கார்ட்டுன் என்று சொல்கிறார்களே கேலிச் சித்திரம், அது முதல் முதலாக வெளியானது எந்த நாட்டில் என்று தெரியுமா ?
ரவி : இங்கிலாந்தில்,
சதீஷ் : அமெரிக்காவில்.
இரத்தின : இரண்டு பேர் சொன்னதும் தவறு விஜி, உனக்குத் தெரியுமா ?
விஜி: நீங்களே சொல்லிவிடுங்கள், அக்கா.
இரத்தின : முதல் முதலாக இத்தாலியில்தான் கேலிச் சித்திரங்களை வெளியிட்டார்கள். அப்புறம் பிரான்ஸ், பிரிட்டன் நாடுகளில் பரவியது. இப்போது எல்லா நாடுகளிலுமே கேலிச் சித்திரங்களைக் காணலாம். ...நந்தனாருக்குத் திருநாளைப்போவார் என்று ஒரு பெயர் உண்டு. அந்தப் பெயர் எப்படி வந்தது?
விஜி : எனக்குத் தெரியும். என் தாத்தா சொல்லியிருக்கிறார். நந்தனாருக்குச் சிதம்பரத்துத்குப் போய் நடராஜரைப் பார்க்க வேண்டும் என்று ஆசையாம். ஆனாலும், கோயிலுக்குள்ளே நுழைய விடுவார்களா என்று அவருக்குச் சந்தேகமாம். தினமும் 'நாளைக்குப் போவேன், நாளைக்குப் போவேன்' என்று நம்பிக்கையோடு சொல்லிக் கொண்டிருப்பாராம். அதனால், அவரை எல்லாரும் நாளைப் போவார்' என்று அழைத்தார்களாம். அதன் பிறகு திருநாளைப் போவார் ஆகிவிட்டதாம்
இரத்தின : அடடே, விஜி அவங்க தாத்தா சொன்னதை நன்றாக நினைவிலே வைத்து அப்படியே சொல்லிவிட்டாளே!...உங்களுக்காகத் தமிழிலே குழந்தைகள் கலைக் களஞ்சியம் பத்துத் தொகுதிகளாக வெளி வந்திருக்கிறதே, அதன் தலைமைப் பதிப்பாசிரியர் யார், தெரியுமா?
சதீஷ் : ம.ப. பெரியசாமித் துரன்.
இரத்தின: சரியான விடை...... ஆங்கிலேயர் ஆட்சியில் முதன் முதலாக மூன்று பல்கலைக் கழகங்கள் மூன்று நகரங்களில் ஏற்படுத்தப்பட்டன. எந்த எந்த நகரங்களில் என்று தெரியுமா?
ரவி : சென்னை, டில்லி, பம்பாய்.
இரத்தின: . ரவி சொன்ன பதிலில் முதலும் கடைசியும் சரியே. ஆனால் நடுவே சொன்னது தான் தவறு
சதீஷ் : நான் சரியாகச் சொல்கிறேன். கல்கத்தா.
இரத்தின: கரெக்ட்! டெலிபோனைக் கண்டு பிடித்த அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல் எந்த நாட்டில் பிறந்தவர்?
விஜி : எடின்பரோவில்,
இரத்தின : எடின்பரோ என்பது அவர் பிறந்த நகரம். ஆனால், எங்த நாட்டில் அவர் பிறந்தார் என்றல்லவா கேட்டேன்? எடின்பரோ எந்த நாட்டின் தலைநகரம்?
விஜி ; ஸ்காட்லாந்து காட்டின் தலைநகரம்
இரத்தின : விஜி சொன்ன விடை சரியே... கடைசியாக ஒரு கேள்வி. 4 கிலோ மீட்டர் துரத்தைக் கடக்க ரவிக்கு ஒரு மணி நேரமாகிறது. ரவி, சதீஷ் இருவரும் சேர்ந்து அதே துாரத்தைக் கடக்க எவ்வளவு நேரமாகும்:
சதீஷ் : அதே நேரம்தான். அதாவது ஒரு மணி! இரத்தின .நீ சொன்னது சரியே. ஆனாலும், இரு நண்பர்கள் பேசிக்கொண்டே நடக்கும் போது ஒரு மணி நேரம் ஆனதாகத் தெரியாது. அதைவிடக் குறைந்த நேரமே ஆனதுபோல் தோன்றும், இல்லையா?
மூவரும் : ஆமாம்! ஆமாம்!
இடம் : முத்துராமலிங்கபுரம்
காமராசர் மாவட்டம்
கேள்வி கேட்பவர் : திலகவதி
பங்கு கொள்வோர்
ரங்கநாதன், கவிதா, ராமச்சந்திரன், அமுதா, குழந்தை புனிதா
திலகவதி : சில பறவைகளால் பறக்க முடியாது. ஆனாலும், வேகமாக ஒடும். பறக்க முடியாமலும், வேகமாக ஒட முடியாமலும, உளளது ஒரு பறவை. அதன் பெயர் தெரியுமா?
கவிதா : நெருப்புக் கோழி.
திலக: இல்லை. நல்ல குளிர்ப் பிரதேசத்தில் அது வசிக்கிறது.
ரங்ககாதன்: தெரியும், தெரியும். அதன் பெயர் பெங்குவின்
திலக: கரெக்ட். இப்போது நம் தேசத்தின் தலைநகராக டில்லி இருக்கிறது. இதற்கு முன்பு வேறொரு நகரம், நம் தேசத் தலைநகராக இருந்தது. அது எந்த நகரம்?
அமுதா : கல்கத்தா.
திலக ; அடே! அமுதா சரியாகச் சொல்லி விட்டாளே! சரி...கிரேட் பிரிட்டன் என்கிறார்களே, அப்படியென்றால் என்ன என்று தெரியுமா?
கவிதா: , இங்கிலாந்தைத்தான் கிரேட் பிரிட்டன் என்கிறோம்.
திலக : கவிதா, நீ சொன்னதில் மூன்றில் ஒரு பங்கு சரி. அதாவது இங்கிலாந்து கிரேட் பிரிட்டனில் ஒரு பகுதி. மற்றும் இரண்டு பகுதிகள் இருக்கின்றன. அவை என்ன? என்ன? .
ராமச்சந்திரன் : ஸ்காட்லாந்து...இன்னொன்று. ம்...ம்... வேல்ஸ்.
திலக : ரொம்ப கரெக்ட், இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் என்ற மூன்று பகுதிகளும் சேர்ந்ததுதான் கிரேட் பிரிட்டன்... தினமும் காலையில் எழுந்ததும் நாம் காப்பி சாப்பிடுகிறோம். இந்த காப்பி மிக அதிக மாக விளையக்கூடிய நாடு எது?
கவிதா : பிரேசில் நாடு.
திலக: ஆம், தென் அமெரிக்காவில் உள்ள பிரேசில் நாட்டில்தான் அதிகமாகக் காப்பி விளைகிறது...நேரு மாமாவை ஆங்கிலேயர்கள் எத்தனை தடவை சிறையில் அடைத்தார்கள், தெரியுமா?
ரங்கநாதன் : ஒன்பது தடவைகள்.
திலக: சரியான விடை நம்தேச விடுதலைக்காக நேரு மாமா சுமார் 13 ஆண்டுகள் சிறையில் இருந்தார். ஒரு முறை அவர் நீண்டகாலம்
அதாவது 1045 நாட்கள் சேர்ந்தாற்போல் சிறைவாசம் செய்தார்!
கவிதா: அடேயப்பா கிட்டத்தட்ட மூணு வருஷம்.
திலக : ஆமாம். 3 வருஷத்துக்கு 50 நாட்கள் தான் குறைவு...நாலடியார் என்கிறார்களே, அப்படி என்றால் என்ன?
அமுதா: அது ஒரு புத்தகம். நாலு நாலு அடி களில் பாட்டு இருக்கும்.
திலக : அமுதா ஒரளவு சரியாகச் சொன்னாள். நான் இன்னும் சற்று தெளிவாகச் சொல்லுகிறேன். நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களால் ஆன நூல் நாலடியார். அதில் 400 பாடல்கள் இருக்கின்றன. நாலடி" என்று பெயர் வைத்திருக்கலாம். ஆனாலும், அந்த நூலுக்குச் சிறப்புக் கொடுப்பதற்காக 'ஆர்' என்று கடைசியில் சேர்த்து * நாலடியார்' என்கின்றனர்......சாந்தி நிகேதனம்’ என்ற பெயரைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். மேற்கு வங்காளத்தில் இருக்கிறது. அதை ஏற்படுத்தியவர் யார்?
ராமச்சந்திரன் : ரவீந்திரகாத தாகூர்.
திலக இல்லை. அமுதா, கவிதா, ரங்ககாதா, உங்களுக்குத் தெரியுமா?
மூவரும் : (மெளனம்)
திலக: சரி, நான் சொல்கிறேன். ரவீந்திரநாத தாகூரின் அப்பா தேவேந்திரநாத தாகூர் தான் அதை ஏற்படுத்தினார். அவர் அதை ஒர் ஆசிரமமாகத்தான் அமைத்தார். 1901-ல், அதாவது 38 ஆண்டுகளுக்குப் பிறகு, ரவீந்திரநாத தாகூர் அங்கு ஒரு கல்வி நிலையம் அமைத்தார். அது இன்று உலகப் புகழ்பெற்று விளங்குகிறது...... மோகினி ஆட்டம் பார்த்திருக்கிறீர்களா? அது எந்த நாட்டு நடனம்?
கவிதா: பார்த்ததில்லை. கேள்விப்பட்டிருக்கிறோம். அது கேரள நாட்டு நடனம்.
திலக: சரியாகச் சொன்னாய். மோகினி ஆட்டம், கதகளி இரண்டும் கேரளநாட்டு நடனங்கள்... தேக்கு மரத்தால் வீடு கட்ட வேண்டும் என்று பலரும் விரும்புகிறார்களே, காரணம் தெரியுமா?
ரங்கநாதன்: தேக்கு மரம் ரொம்ப நாள் உறுதியாக இருக்கும். செல் அரிக்காது; உளுத்துப் போகாது.
திலக: உண்மைதான். சில கோயில்களில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு செய்த வாகனங்கள், போட்ட கதவுகள், உத்தரங்களெல்லாம் இன்னமும் நல்ல நிலையில் இருக்கின்றன. சரி, வெட்டுக் கிளிக்கு எத்தனை கால்கள்? சட்டென்று சொல்ல முடியுமா?
ராமச்சந்திரன்: ஆறு கால்கள்.
திலக : ரொம்ப கரெக்ட். ஆனால் அந்த ஆறு கால்களும் மூன்று விதமாக இருக்கும். அதன் உடலின் முன் பாகத்தில் உள்ள இரண்டு கால்களும் சிறியவை. நடுப் பாகத்தில் உள்ள இரண்டும் சற்று நீளமானவை. உடலின் பின் பக்கத்தில் உள்ள இரண்டும் நீளமாகவும் பெரிதாகவும் இருக்கும். ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு விளையாட்டு மூலமே எல்லாவற்றையும் கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற கல்வி முறையை முதலில் வகுத்தவர் ஒரு பெண்மணி. அவர் பெயர் என்ன? அவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
அமுதா: மான்டிசோரி அம்மையார். இங்கிலாந்தைச் சேர்ந்தவர்.
திலக: முதல் விடை சரிதான். இரண்டாவது விடை தவறு.
கவிதா : இங்கிலாந்து இல்லை; இத்தாலி.
திலக: கரெக்ட் இத்தாலி நாட்டைச் சேர்ந்த மான்டிசோரி அம்மையார்தான் அந்தக் கல்வி முறையை வகுத்தவர். அதனால்தான் அப்படிக் கற்றுக் கொடுக்கப்படும் பள்ளி களை மான்டிசோரி பள்ளி' என்கிறார்கள். பழனிக்குப் போயிருப்பீர்களே, அங்கு மலை ஏற எத்தனை படிகளைக் கடக்க வேண்டும்?
அமுதா : பழனிக்குப் போயிருக்கிறேன். ஆனால், படிகளை எண்ணிப் பார்க்கவில்லை.
கவிதா : 500 படிகள்.
ரங்கநாதன் : இல்லை. 600 படிகள்.
திலக: என்ன ராமச்சந்திரா, உன் விடை என்ன? எழுநூறா?
ராமச்சந்திரன் : தெரியவில்லை. நீங்களே கூறி விடுங்கள்.
திலக : 648 படிகள். படி வழியாக ஏற முடியாத வர்களுக்காக ஓர் ஏற்பாடு செய்திருக்கிறார்களே, அது என்ன?
ரங்கநாதன் : மின்சாரத் தொட்டில்.
திலக: ஆம், விஞ்ச் (Winch) என்று அதை ஆங்கிலத்தில் சொல்கிறார்கள். இதோ இருக்கிறதே, இது ஒரு தேசத்தின் கொடி. எந்த நாட்டுக் கொடி என்று கூற முடியுமா?
கவிதா : பாக்கிஸ்தான் கொடி.
திலக: இல்லை. பாக்கிஸ்தான் கொடியிலே பிறைச் சந்திரனும் ஒரு நட்சத்திரமும் இருக்கும். ஆனால், இதிலே நடுவிலே ஒரு பெரிய நட்சத்திரமும் அதைச் சுற்றி ஐந்து சிறிய நட்சத்திரங்களும் இருக்கின்றனவே!
அமுதா : சிறீலங்கா தேசிக் கொடியாக இருக்கும்.
திலக : அதுவும் இல்லை. சிறீலங்கா கொடியில் சிங்கம் இருக்கும்.
ரங்கநாதன் : பர்மா தேசக் கொடி.
திலக : ரங்ககாதன் சரியாகச் சொல்லிவிட்டான். நான் இப்போது ஒரு பாட்டிலே நாலு வரிகளைச் சொல்லப் போகிறேன் :
சின்னச் சின்ன எறும்பே,
சிங்காரச் சிற்றெறும்பே,
உன்னைப் போல நானுமே
உழைத்திடவே வேணுமே.
இதைப் பாடியவர் யார்?
கவிதா : கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை.
அமுதா: எனக்குத் தெரியும் சரியான விடை. முத்துக் குவியல்’னு ஒரு புத்தகம். அதிலே பல கவிஞர்களுடைய குழந்தைப் பாடல்களையெல்லாம் போன மாதம்தான் படித்தேன். அதிலே இந்தப் பாட்டும் இருக்கிறது. இதை எழுதியவர் நமச்சிவாய முதலியார்.
திலக: சரியாகச் சொன்னாய். கா. நமச்சிவாய முதலியார் பெரிய தமிழறிஞர். பல புத்தகங்களை எழுதியிருக்கிறார். தமிழ்ப் புலவர்களுக்கு மிகவும் ஆதரவு தந்தவர். முதல் வகுப்பிலிருந்து ஒன்பதாம் வகுப்பு வரை தமிழ்ப் பாடப் புத்தகங்களை எழுதினார். அந்தப் பாடப் புத்தகங்களில் உள்ள ஒரு பாட்டுத்தான் சின்னச் சின்ன எறும்பே' என்ற பாட்டு. சரி, கடைசியாக ஒரு கேள்வி. எனக்குத் தெரிந்த ஒருவர் வீட்டுக்கு ஒருநாள் சென்றிருந்தேன். அந்த வீட்டுத் தாத்தா அங்கிருந்த ஒரு புலித்தோலைக் காட்டி, என் முன்னோர்களில் ஒருவர் வேட்டையாடுவதில் மிகவும் கெட்டிக்காரராக இருந்தார். அவர் 600 வருஷங்களுக்கு முன்பு துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற புலியின் தோல்தான் இது!’ என்றார். என்னால் அவர் சொன்னதை நம்ப முடியவில்லை. அதற்கு என்ன காரணம் என்று உங்களுக்குத் தெரியுமா?
கவிதா: எனக்குத் தெரியும். அந்தப் புலித் தோலில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்த ஒட்டை இருந்திருக்காது.
அமுதா : 600 வருஷத்துக்கு முன்னாலே நம் நாட்டுக்காரர்களுக்குத் துப்பாக்கியால் சுடவா தெரிந்திருக்கும்?
திலக : அதெல்லாம் காரணம் இல்லை. நானே சொல்லிவிடுகிறேன். வேட்டைத் துப்பாக்கி யைக் கண்டுபிடித்ததே 1520ஆம் ஆண்டிலே தான்.
ராமச்சந்திரன் : அப்படியானால் இன்னும் 500 ஆண்டுகள் கூட ஆகவில்லையே! அவர் எப்படி 600 ஆண்டுகளுக்கு முன்பு துப்பாக்கியால் சுட்டிருக்க முடியும்?
மற்றவர்கள் : ஆமாம், எப்படி முடியும்? (சிரிக்கிறார்கள்).
இடம் : தேனி, மதுரை மாவட்டம்
கேள்வி கேட்பவர் : தேனி முருகேசன்
பங்கு கொள்வோர் :
எம். கார்த்திகேயன், டி. சசிகலா, எல். லிங்கராஜ்
தேனி முருகேசன்: என் அரசியல் வாரிசு' என்று மகாத்மா காந்தி ஒருவரைப் பற்றிச் சொன்னார். அந்த ஒருவர் யார்?
சசிகலா: நேரு மாமாதான்.
தேனி : பேஷ்! என் முதல் கேள்விக்கே சரியான விடை கிடைத்துவிட்டது சரி, இராமேஸ்வரத்திலுள்ள சுவாமி பெயர் இராமலிங்கம். இராமநாத சுவாமி என்றும் சொல்கிறார்கள். அம்மன் பெயர் தெரியுமா?
கார்த்திகேயன் : பர்வதவர்த்தினி.
தேனி: சரியாகச் சொன்னாய். கலிவரின் பயணங்கள் (Gulliver's Travels) என்ற கதையை எழுதியவர் யார் ?
லிங்கராஜ்: எச். கிருஷ்ணமூர்த்தி.
கார்த்தி: ஐயையோ! அந்தக் கிருஷ்ணமூர்த்தி . கோகுலம் இதழில் உலகப் புகழ்பெற்ற சிறுவர் கதைகளைத் தமிழிலே சுருக்கித் தருபவ.
ரல்லவா? ஆனால், ஆங்கிலக் கதையை எழுதியவர். கோகுலத்தில்கூடப் படித்தேனே!..ம்...ம். ஸ்விப்ட் என்பவர்தான்.
தேனி: அவரது முழுப் பெயர் தெரியாதா?
கார்த்தி: இதோ சொல்கிறேன். சோமநாதன். இல்லை, இல்லை. ஜொனாதன் ஸ்விப்ட், சரிதானே அண்ணா?
தேனி: ரொம்ப கரெக்ட். Jonathan Swift என்பவர்தான் கலிவரின் பயணங்களை எழுதினவர்...இலங்கைக்கு சிறீலங்கா என்று புதிய பெயர் சூட்டியது எப்போது என்று கூற முடியுமா?
லிங்க : அது குடியரசு நாடானபோது.
தேனி: சரியான விடை. 1972-ஆம் ஆண்டில் அது குடியரசானது. அப்போது சிறீலங்கா என்று பெயர் சூட்டினார்கள்...நம்முடைய ராஜாஜி, பெரியார் இருவரும் 94 ஆண்டுகள் வாழ்ந்தனர். இவர்களைப் போலவே 94 ஆண்டுகள் வாழ்ந்தார் ஒர் ஆங்கில நாடக ஆசிரியர். அவர் பெயர் தெரியுமா?
சசி : ஷேக்ஸ்பியர்.
தேனி: இல்லை. அவர் 52-ஆம் வயதிலேயே காலமாகி விட்டார். கார்த்தி: பெர்னாட் ஷா,
தேனி: ஆம், 50-க்கு மேற்பட்ட ஆங்கில நாடகங்களை எழுதிப் புகழ் பெற்ற ஜார்ஜ் பெர்னார்ட்ஷா தான் 94 ஆண்டுகள் வாழ்ந்தவர். சரி, அவர் எந்த ஊரில் பிறந்தார்.
கார்த்தி : லண்டனில்.
தேனி: தவறு. லிங்க : அயர்லாந்தில்.
தேனி அவர் பிறந்தது அயர்லாந்து நாட்டில்தான். ஆனால், நான் கேட்டது எந்த ஊரில் என்றல்லவா?
எல்லோரும் : (மெளனம்)
தேனி: சரி, நானே சொல்லி விடுகிறேன். அவர் பிறந்தது அயர்லாந்தின் தலைநகரான டப்ளினில்... ஒரிசா மாநிலத்தின் இப்போதைய தலைநகரம் புவனேஸ்வரம். முன்பு எது தலைநகரமாக இருந்தது?
லிங்க : கட்...
தேனி : என்ன, பாதியிலே கட் பண்ணி விட்டாயே! முழுப் பெயர் நினைவுக்கு வரவில்லையோ?
லிங்க : இதோ வந்து விட்டது. கட்டாக்.
தேனி: சரியான விடை... இந்தியாவின் வாயில் (Gate way of India) என்று எந்த நகரத்தைச் சொல்கிறார்கள்?
கார்த்தி : டில்லி,
லிங்க : இல்லை. கல்கத்தா,
தேனி : இரண்டுமே தவறு
சசி ; பம்பாய்.
தேனி: பம்பாய் என்பது சரிதான். ஆனால், ஒவ்வொரு நகரமாகச் சொல்லிக்கொண்டே வருவது சரியில்லையே வெளிநாட்டு வர்த்தகத்திற்கு பம்பாய் மையமாக விளங்கு வதால், அதை இந்தியாவின் வாயில் என்று கூறினார்கள். பொருத்தம்தானே!... நேப்பாளத்தின் தேசியச் சின்னம் எது?
லிங்க : எருமை.
தேனி : இல்லை
கார்த்தி : மாடு
தேனி : இல்லை. சசி, உனக்குத் தெரியுமா...? சரி, நானே சொல்கிறேன். சிவபெருமானின் உருவம் பொறித்த முத்திரைதான் நேப்பாளத்தின் தேசியச் சின்னம்... திரு வி. க. இரண்டு கல்வி நிலையங்களில் ஆசிரியராக இருந்தார். இரண்டாவதாக இருந்தது சென்னை வெஸ்லி கல்லூரியில். முதலில் எந்தப் பள்ளியில் வேலை பார்த்தார், தெரியுமா?
எல்லாரும் : (மெளனம்)
தேனி : யாருக்குமே தெரியாதா? அவர் சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் இருந்த ஒர் ஆதித் திராவிடர் பள்ளியில்தான் முதல் முதலாக ஆசிரியர் வேலை பார்த்தார். இதோ இந்தப் படத்தைப் பாருங்கள். இது என்ன என்று தெரிகிறதா?
சசி : உடுக்கு.
தேனி: இல்லை. நன்றாகப் பாருங்கள்.
கார்த்தி : மணற் கடிகாரம்.
தேனி: அடே, கார்த்திக் சரியாகச் சொல்லி விட்டானே! முற்காலத்தில் நிழற் கடிகாரம், நீர்க் கடிகாரம், மெழுகுவர்த்திக் கடிகாரம் என்று பல வகைக் கடிகாரங்கள் இருந்தன. அவற்றிலே ஒன்றுதான் இது. இந்தக் கண்ணாடிப் பாத்திரம் உடுக்கைப் போல் இருக்கிறது மேலே ஒரு கூம்பு, கீழே ஒரு கூம்பு, இரண்டையும் இணைக்கும் இடம் மிகவும் குறுகலாக இருக்கிறது. மேல் கூம்பிலே உலர்ந்த மணலைக் கொட்டி வைப்
பார்கள். அது ஒரே சீராகக் கீழே உள்ள கூம்பில் விழும். விழுகின்ற மணலின் அளவைக் கொண்டு காலத்தைக் கணக்கிட்டார்கள்... இப்போது காண்டா மிருகத்தைப் பற்றி ஒரு கேள்வி, அது இவ்வளவு பருமனாக இருக்கிறதே, அது எந்த மிருகத்தை விரும்பிச் சாப்பிடும்?
சசி: ஐயோ, அது மாமிசத்தையே தொடாதே! புல், பூண்டு, தழைகளைத்தான் தின்னும்.
தேனி : சசிகலா சரியாகச் சொன்னாள். சென்னையில் கன்னிமாரா நூல் நிலையம்' என்று ஒரு பெரிய நூல் நிலையம் இருக்கிறதே, இதற்கு இப்பெயர் எப்படி வந்தது?
கார்த்தி : வெள்ளைக்காரர்கள் கன்னி மேரி நூல் நிலையம்' என்று பெயர் வைத்திருப்பார்கள். அதுதான் கன்னிமாரா' என்று. மாறிவிட்டது.
தேனி: விடை தவறு. ஆனால் நல்ல கற்பனை. சசி, லிங்கராஜ், உங்களுக்குத் தெரியுமா?
இருவரும் : தெரியாது.
தேனி : கன்னிமாரா என்ற ஆங்கிலேயர் சென்னையில் கவர்னராயிருந்தார். அவர் பெயரால் 1896ல் தொடங்கப்பட்டதுதான் கன்னிமாரா நூல் நிலையம்'...இப்போது சில அரசியல் தலைவர்கள் நெடுந்தூரம் பாத
யாத்திரை போகிறார்கள். இமய முதல் குமரி வரை நடந்தே சென்று, தம் குருநாதரின் உபதேசங்களைப் பரப்பினார் ஒருவர். அவர் யார்?
லிங்க : சுவாமி விவேகானந்தர்.
தேனி: சரியான விடை, சுவாமி விவேகானந்தர், தம் குருவாகிய இராமகிருஷ்ண பரமஹம்சரின் உபதேசங்களை அப்படித்தான் பரப்பினார்... ரஷ்யர்கள் ஸ்புட்னிக்-2 என்ற செயற்கைக் கிரகத்தில் ஒரு நாயை வைத்து அனுப்பினார் களே, அதன் பெயர் தெரியுமா?
எல்லாரும் : (மெளனம்)
தேனி: என்ன, ஒருவருக்குமே தெரியாதா! அதன் பெயர் லைக்கா. அது பத்திரமாகப் பூமிக்குத் திரும்பி வந்ததால், பிறகு ஒரு மனிதரையே விண்வெளியில் அனுப்பினார் கள். அந்த மனிதர் பெயராவது தெரியுமா?
கார்த்தி : ககாரின்
தேனி: ரொம்ப சரி, யூரி ககாரின் என்ற ரஷ்யர்தான் விண்வெளிக் கலத்தில் முதல் முதலாகச் சென்று பத்திரமாகத் திரும்பி வந்தவர். வாஸ்கோட காமாவைப் பற்றி, வரலாறு படிக்கும்போது நன்கு தெரிந்து கொண்டிருப்பீர்கள். அவர் எங்கே இறந்தார் என்று தெரியுமா?
லிங்க : கொச்சி நகரில்.
தேனி: அடடே, அதையும் வரலாற்று நூலிலே படித்து நினைவில் வைத்திருக்கிறாய் போலிருக்கிறது! ரொம்ப நல்லது...நம் தேசத் தலைவர்களில் ஒருவர் வழக்கறிஞராக இருந்தார். அவருடைய தந்தையும் வழக் கறிஞராயிருந்தார். இருவரும் ஒரு சமயம் எதிர் எதிராக நின்று வழக்காடினார்கள். அதில் மகன் வெற்றி பெற்றார். அந்தத் தலைவர் பெயர் என்ன? அவர் தங்தை பெயர் என்ன?
சசி: ஜவாஹர்லால் நேருவும் அவரது தந்தை மோதிலால் நேருவும்.
தேனி: இல்லை.
கார்த்தி கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளை. அவர் தந்தை பெயர் தெரிய வில்லை.
தேனி : மகன் பெயரைச் சரியாகச் சொல்லி விட்டாய். தந்தையார் பெயர் உலகநாத பிள்ளை சதுரங்க ஆட்டத்திற்கான பலகையில் மொத்தம் எத்தனை கட்டங்கள் இருக்கின்றன?
கார்த்தி: 32.
தேனி: தவறு.
லிங்க : 64.
தேனி: கரெக்ட். இந்த ஆட்டத்தை இருவர் ஆடுவார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். ஒவ்வொரு ஆட்டக்காரருக்கும் தனித்தனியாக எத்தனை காய்கள் இருக்கும்?
கார்த்தி : 16
தேனி : ரொம்ப கரெக்ட். அரசர்.1, அரசி அல்லது அமைச்சர்-1, யானை 2, தேர்.2, குதிரை-2, காலாட்கள் 8 ஆக 16 காய்கள்... நாம் நம் சுதந்திர தினத்தை ஆகஸ்ட் 15-ல் கொண்டாடுகிறோம். இதேபோல் இன்னொரு நாடும் அதே தேதியில் சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது. அந்த நாடு எது?
லிங்க : தென் கொரியா,
தேனி: சரியான விடை.
இடம் : சென்னை, அண்ணாநகர்
கேள்வி கேட்பவர் :
அலமேலு அழகப்பன்.
பங்கு பெறுவோர் :
எஸ். ஜெயா, பி. கிரிசங்கர்
பி. கே. சரவணன்.
அலமேலு : கோனார் உரைநூல் என்றால் உங்களுக்கு நன்றாகத் தெரியும். கோனார் என்கிறார்களே, அவருடைய முழுப் பெயர் தெரியுமா ?
சரவணன்: தெரியும் அக்கா. ஐயன் பெருமாள் கோனார்
அலமேலு: சரியான விடை. அவர் திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருந்தார், இப் போது இங்கிலீஷிற்குக்கூட, கோனார் நோட்ஸ்' இருக்கிறதா என்று சில மாணவர்கள் கேட்கிறார்கள்! அந்த அளவுக்கு அவர் பெயர் பிரபலமாகியிருக்கிறது!... மகாத்மா காந்தி நடத்திய பத்திரிகைகளின் பெயர்களைக் கூற முடியுமா ?
கிரிசங்கர்: ஹரிஜன் பத்திரிகை
அலமேலு : உம்... இன்னும் சில பத்திரிகைகளையும் அவர் ஆசிரியராயிருந்து நடத்தியிருக்கிறாரே !
சரவணன்: யங் இந்தியா'... நவஜீவன்'.
அலமேலு: சரி... இந்தியாவில் அவர் நடத்திய மூன்று பத்திரிகைப் பெயர்களையும் கிரியும் சரவணனும் சேர்ந்து கூறி விட்டார்கள். ஆனால், தென் ஆப்பிரிக்காவில் அவர் இருந்த போது, ’இந்தியன் ஒப்பீனியன்’
என்று ஒரு பத்திரிகையை நடத்தினார். அதுதான் அவருடைய முதல் பத்திரிகை, சர் ஜசக் என்று தொடங்கும் பெயர்களில் இரண்டு பேர் உலகப் புகழ் பெற்றிருக் கிறார்கள். அவர்களின் பெயர்கள் தெரியுமா ?
ஜெயா : சர் ஐசக் கியூட்டன். புவி ஈர்ப்புச் சக்தியைக் கண்டுபிடித்தவர். இன்னொருவர்... இன்னொருவர்....
அலமேலு: தலையைச் சொறிகிறாயே, சரி வேறு யாருக்காவது தெரியுமா ?
எல்லோரும் : (மெளனம்).
அலமேலு : இன்னொருவர் சர் ஐசக் பிட்மென். பிட்மென், சுருக்கெழுத்துக் கண்டு பிடித்தவர். பிட்மென் ஷார்ட் ஹாண்ட் (Pitman's shorthand) என்று கேள்விப்பட்டிருப்பீகளே! சரி, யூக்கலிப்டஸ் அதாவது நீல கிரித் தைலம் என்கிறோமே, அந்தத் தைலத்தை எதிலிருந்து எடுக்கிறார்கள்?
ஜெயா : யூக்கலிப்டஸ் மரப் பட்டையிலிருந்து.
அலமேலு : இல்லை, ஜெயா விடை தவறு.
கிரி : யூக்கலிப்டஸ் இலையிலிருந்துதான் தைலம் எடுக்கிறார்கள்.
3085-6
அலமேலு: ஆம், கிரி சொன்னதே சரி. யூக்கலிப்டஸ் மரத்திலிருந்து இலைகளைப் பறித்து ஒரு பெரிய பாத்திரத்திலே போட்டு, அதிலே நீர் விட்டுக் காய்ச்சு வார்கள். அப்போது பாத்திரத்திலிருந்து குபுகுபுவென்று ஆவிவரும். அந்த ஆவியைச் சேகரித்துக் குளிர வைப்பார்கள். அதுதான் நீலகிரித் தைலம்...இதோ இங்கு நான்கு பிராணிகள் இருக்கின்றன. நத்தை, தவளை, கரப்பான்பூச்சி, பாம்பு இந்த நான்கிலே இரண்டு ஒரு வகையைச் சேர்ந்தவை. மற்ற இரண்டும் வேறொரு வகையைச் சேர்ந்தவை. கண்டுபிடிக்க முடிகிறதா?
சரவணன்: கத்தையும், தவளையும் நீரில் வசிப்பவை, கரப்பான் பூச்சியும் பாம்பும் நிலத்தில் வசிப்பவை.
அலமேலு: சரவணா, நீ சொன்னது சரியான விடையில்லை. பாம்பில் கூடத்தான் தண்ணிர்ப் பாம்பு இருக்கிறது. வேறு யாருக்குத் தெரியும்?
ஜெயா : எனக்குத் தெரியும். பாம்புக்கும் தவளைக்கும் முதுகு எலும்பு உண்டு; நத்தைக்கும் கரப்பானுக்கும் முதுகு எலும்பு இல்லை.
அலமேலு: ஆஹா ஜெயா எவ்வளவு சரியாய்ச் சொல்லிவிட்டாள்! சரி, Unicef என்றால் என்ன?
கிரி : அடிக்கடி டி. வி. யில் காட்டுகிறார்கள். United Nations international Children’s Fund என்பதைத்தான் அப்படிச் சுருக்கிச் சொல்கிறார்கள்.
அலமேலு : கிட்டத்தட்டச் சரியாகச் சொல்லி விட்டாய். கிட்டத்தட்ட' என்று ஏன் சொல்கிறேன், தெரியுமா? நீ சொன்ன ஒவ்வொரு சொல்லிலும் முதல் எழுத்தை எடுத்துக்கொண்டால் Unicf என்றுதானே வரும்? 'E' என்ற எழுத்து விடுபட்டுப் போகிறதே!
கிரி : ஆமாம் அக்கா. இதோ நான் சரியாய்ச் சொல்கிறேன். United Nations international Children's Emergency Fund.
அலமேலு : கரெக்ட். ஆனாலும் Emergency என்பதை மட்டும் பிராக்கெட்டுக்குள் அதாவது அடைப்புக் குறிக்குள் போடுகிறார் கள். ஐக்கிய நாடுகளின் சர்வதேசக் குழந்தை
களின் அவசரத் தேவைக்கான நிதி என்று அர்த்தம். யுத்தத்தால் அவதிப்படும் நாட்டுக் குழந்தைகளுக்கு இது மிகவும் உதவி வருகிறது...முதல் முதலில் இந்தியாவில் மின்சார ரயில் எங்கு விடப்பட்டது ?
ஜெயா : பம்பாயில்.
அலமேலு: ஆம். பம்பாயிலிருந்து குர்லா என்ற இடத்துக்கு முதல் முதலாக 1925-ஆம் ஆண்டு மின்சார வண்டி விடப்பட்டது. மெட்ரிக் முறையைத்தான் இப்போது நாம் எல்லோரும் கையாண்டு வருகிறோம். இந்த முறையைக் கண்டுபிடித்தவர் யார்?
கிரி : ஒரு பிரெஞ்சுக்காரர்....பெயர்......தெரிய வில்லை.
அலமேலு : வேறு யாரேனும் சொல்வீர்களா?
எல்லாரும் (மெளனம்).
அலமேலு : நானே சொல்கிறேன். அதைக் கண்டு பிடித்தவர் ஒருவரல்லர், ஏழு பிரெஞ்சுக்காரர்கள் அடங்கிய ஒரு குழுதான் கண்டு பிடித்தது. அந்த ஏழு பேரும் சேர்ந்து ஒன்பது ஆண்டுகளில் கண்டுபிடித்தார்கள். 1790 முதல் 1799 வரை...'சுவரை வைத்துத் தான் சித்திரம் எழுத வேண்டும்' என்று ஒரு பழமொழி இருக்கிறதே, அது எப்படி வந்தது?
சரவணன்: முன் காலத்தில் அநேகமாக ஒவியங்களை யெல்லாம் சுவர்களிலே எழுதினார்கள். அதனால்தான் அந்தப் பழமொழி.
அலமேலு : உண்மைதான். முன்காலத்தில் பெரும்பாலும் சுவர்களில்தான் சித்திரங்கள் எழுதப்பட்டன. கோயில்கள், அரண்மனைகள், சித்திர மாடங்கள் இப்படி எல்லாவற்றிலும் சுவர் ஒவியங்கள் எழுதப்பட்டன. ஆனால் இப்போதுதான் துணிகளிலும் தாள்களிலும் பலகைகளிலும் சித்திரங்களை வரைகிறார்களே!...நேரு மாமாவின் கூடப் பிறந்த இரண்டு சகோதரிகளின் பெயர்கள் தெரியுமா?
ஜெயா: ஒருவர் பெயர் விஜயலட்சுமி பண்டிட்... இன்னொருவர் பெயர்...சுசேதா கிருபலானி.
அலமேலு : ஜெயா, முதலில் சொன்ன பெயர் சரிதான். ஆனால், இரண்டாவது பெயர் தவறு.
கிரி : நான் சொல்கிறேன். கிருஷ்ணா.
அலமேலு : கிருஷ்ணா என்பது சரிதான். ஆனால், அவரது முழுப் பெயர் திருஷ்ணா ஹத்திசிங், மக்காவிற்குப் புனித யாத்திரை சென்று வந்தவர்களுக்கு ஒரு பட்டம் வழங்கப் படுகிறது. அது என்ன பட்டம் !
சரவணன்: ஹாஜி என்ற பட்டம்தானே?
அலமேலு: ஆம், சரியான விடை சுத்தத் தங்கம் எத்தனை காரட் எடையுள்ளது?
ஜெயா : 24 காரட்.
அலமேலு : கரெக்ட். எவரெஸ்ட் சிகரத்தை எட்டிப் பிடித்து வெற்றிக்கொடி காட்டியவர்கள் டென்சிங்கும், ஹில்லரியும் என்பது நமக்குத் தெரியும். ஆனால், அதற்குப் பிறகு, இருமுறை எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தவர் யார் என்று தெரியுமா?
எல்லாரும் (மெளனம்).
அலமேலு: ஒருவருக்கும் தெரியாதா நவாங் கொம்பா என்பவர் 1963, 1965 ஆகிய இரு ஆண்டுகளில் எவரெஸ்ட் சிகரத்தை அடைந் திருக்கிறார். அவரும் டென்சிங் இனத்தைச் சேர்ந்தவர்தான்......இதோ இந்தப் படத்தைப் பாருங்கள். இதில் இருப்பது என்ன என்று தெரிகிறதா?
சரவணன்: ஓ, நன்றாகத் தெரிகிறதே, இதுதான் விசைக் காற்றாடி.
ஜெயா : ஐயையோ விசைக் காற்றாடி இப்படியா இருக்கும்? காற்றாடியிலே நீளநீளத் தகடு இருக்குமே!
கிரி : இது. ராடார் கருவி.
அலமேலு : கரெக்ட். ஒரு பொருளின் இருப்பிடத்தையும் தூரத்தையும், ரேடியோ அலைகளைக்கொண்டு அறிவதற்குப் பயன்படும் ராடார் கருவிதான் இது. முன்பெல்லாம் கோயில் கட்டடங்கள் செங்கற்களாலே கட்டப்பட்டிருக்கும். பிறகுதான் கருங்கற்களைக் கொண்டு கட்டினார்கள். முதல் முதலாகக் கருங்கற்களால் கட்டப்பட்ட கோயில் எது, தெரியுமா?
சரவணன் : அந்தக் கோயில் காஞ்சிபுரத்தில் இருக்கிறது. ஏகாம்பரநாதர் என்று நினைக்கிறேன்.
அலமேலு : காஞ்சிபுரம் என்பது சரியே. ஆனால். ஏகாம்பரநாதர் கோயில் என்பது தவறு.
ஜெயா: கைலாசநாதர் கோயில்.
அலமேலு: ஆம், கைலாசநாதர் கோயில்தான் முதன் முதலாக அமைக்கப்பட்ட கற்றளிக் கோயில். இந்திய அரசு அளிக்கின்ற விருது
களில் மிகவும் உயர்ந்தது. பாரத ரத்னா. அடுத்த மூன்றைக் கூறுங்கள், பார்க்கலாம்.
கிரி: பத்மவிபூஷண், பத்மசிறீ, பத்மபூஷண்.
அலமேலு: சரிதான். ஆனாலும், இடம் மாறி இருக்கின்றன. பத்மவிபூஷண். அதற்கு அடுத்தது பத்மபூஷண், அதற்கும் அடுத்தது பத்மசிறீ... அந்தமான், நிகோபார் தீவுகள் என்கிறார்களே, அவற்றில் மொத்தம் எத்தனை தீவுகள் இருக்கின்றன?
ஜெயா: இரண்டு தீவுகள். ஒன்று அந்தமான்; இன்னொன்று நிகோபார்.
அலமேலு: தவறு, தவறு.
சரவணன்: ஒவ்வொன்றிலும் பல தீவுகள் இருக்கின்றன. எத்தனை எத்தனை என்று சரியாகத் தெரியாது.
அலமேலு: சரி, நானே சொல்லிவிடுகிறேன். அந்தமானில் 205 தீவுகள், நிகோபாரில் 19 தீவுகள். மொத்தம் ..
ஜெயா: 224 தீவுகள்.
அலமேலு: ஆம். இந்த 224 தீவுகளும் சேர்ந்ததுதான் அங்தமான், நிகோபார் தீவுகள். பெரு நகரம்-அதாவது மெட்ரோபாலிடன் சிட்டி என்கிறார்களே, எந்த மாதிரி நகரத்தை அப்படிச் சொல்லுகிறார்கள்?
சரவணன்: 10 லட்சம் மக்களுக்கு மேல் இருந்தால் அந்த நகரத்தை மெட்ரோபாலிடன் சிட்டி என்கிறார்கள்.
அலமேலு : வெரிகுட் மிகவும் சரியாகச் சொன்னாய்...நம் தேசத்தில் ஐந்தாண்டுத் திட்டம் என்று ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கும் அபிவிருத்தித் திட்டம் தயாரிக்கிறார்களே, இதை முதலில் துவக்கியது எந்த நாடு?
கிரி: அமெரிக்கா.
அலமேலு : இல்லை.
சரவணன் : ரஷ்யா.
அலமேலு : ஒஹோ! அமெரிக்கா இல்லை என்றால் ரஷ்யாவா? எப்படியோ சரியான விடையைச் சொல்லிவிட்டாய். ரஷ்யாவில் தான் 1928-ல் ஐந்தாண்டுத் திட்டம் துவங்கப் பெற்றது...சென்னை நகருக்கு வீராணம் என்ற ஏரியிலிருந்து தண்ணீர் கொண்டு வர ஒரு திட்டம் இருந்தது. அந்த ஏரி எங்கே இருக்கிறது?
ஜெயா : சிதம்பரத்துக்குப் பக்கத்திலே.
அலமேலு : ஆம், தென் ஆர்க்காட்டில் சிதம்பரம் வட்டத்திலே இருக்கிறது. இந்த ஏரி கடலைப் போல நீளமாகவும், விரிவாகவும் இருக்கும். தமிழ் நாட்டிலேயே மிகப் பெரிய ஏரி
இதுதான்...மறைமலை அடிகள் மிகப் பெரிய தமிழறிஞர் என்பது உங்களுக்குத் தெரியும். அவருடைய இயற்பெயர் என்ன?
சரவணன்: வேதாசலம்.
அலமேலு: சரியான விடை. வேதம் = மறை, அசலம் = மலை. இரண்டையும் சேர்த்தால் மறைமலை. அவரை சுவாமி வேதாசலம் என்று பலரும் மரியாதையோடு அழைத்து வந்ததால், மறைமலை அடிகள் என்று பின்னர் அழைத்தார்கள்...ஐதராபாத் எங்கே உள்ளது என்று கேட்டால், ஆந்திர மாநிலத்தில் என்று உடனே கூறி விடுவீர் கள். இன்னோரிடத்திலும் ஐதராபாத் என்ற பெயரில் ஒரு நகரம் இருக்கிறது. எங்கே என்று தெரியுமா?
எல்லாரும் : (மெளனம்)
அலமேலு: ஒருவருக்கும் தெரியவில்லையே! பாகிஸ்தானில் சிந்து நதியின் மேற்குக் கரைக்கு அருகிலே ஒரு குன்று இருக்கிறது. அதன் மேல்தான் இருக்கிறது, இன்னொரு ஐதராபாத் நகரம்... காந்தி புராணம்' என்ற கவிதை நூலை ஓர் அம்மையார் பாடியிருக்கிறார். அவர் பெயர் தெரியுமா?
ஜெயா : செளந்தரா கைலாசம். அலமேலு இல்லை. ஒரு குறிப்புத் தருகிறேன். அந்த அம்மையாரின் முன்னால் பண்டிதை என்ற பட்டம் இருக்கும்.
சரவணன் : உம்........ கேள்விப்பட்டிருக்கிறேன். பண்டிதை அசலாம்பிகை அம்மையார்.
அலமேலு : சரியாகச் சொன்னாய். காந்தி புராணம் மட்டுமல்ல, திலகர் புராணம்’ என்று ஒரு புத்தகமும் எழுதியிருக்கிறார். இன்னும் பல தல புராணங்களும் எழுதியிருக்கிறார்.
கிரி சங்கர், நீ கப்பல் பார்த்திருக்கிறாயா ?
கிரி : ஒ, பார்த்திருக்கிறேனே! அலமேலு எப்போது பார்த்தாய் ! எங்கே பார்த்தாய் ?
கிரி: போன கோடை விடுமுறையிலேதான் நான் கப்பலைப் பார்த்தேன். மிகப் பெரிய கப்பல். உள்ளேயெல்லாம் கூட என்னை என் மாமா அழைத்துப் போய்க் காட்டினார்.
அலமேலு : ஒ, அப்படியா ! எங்கே பார்த்தாய் என்று கேட்டேனே ? கிரி : என் மாமா டில்லியில்தானே இருக்கிறார் ! கப்பலை டில்லியில்தான் பார்த்தேன். (மற்றவர்கள் சிரிக்கிறார்கள்.)
கிரி : (கோபமாக) ஏன் சிரிக்கிறீர்கள் !
அலமேலு : கிரி, கோபப்படாதே ! டில்லியில் கடலே கிடையாது. கப்பலை எப்படிப் பார்த்திருப்பாய் ! (மற்றவர்கள் மேலும் சிரிக்கிறார்கள்)
இடம் கோனாபட்டு,
புதுக்கோட்டை மாவட்டம்
கேள்வி கேட்பவர் : பால நடராஜன்
பங்கு கொள்வோர் :
சி. பத்மஜா, ம. இராஜலெட்சுமி, கி. சுப்பிரமணியன்
பால நடராஜன்: நம் தேச விடுதலைக்காகப் பாடுபட்ட ஒரு தந்தையும் மகனும் ஒரே நாளில் சிறைப்படுத்தப்பட்டார்கள். அவர்கள் யார், யார் என்று தெரியுமா?
பத்மஜா: நேரு மாமாவும் அவரது தந்தை பண்டித மோதிலால் நேருவும்.
பால: அடே, பத்மஜா சரியாகக் கூறி விட்டாளே! 6.12-1921ல் இரு வரையும் ஆங்கிலேயர் கைது செய்தார்கள். சரி, நான்கு வேதங்கள் என்று சொல்கிறார்களே, அவை யாவை ?
சுப்பிரமணியன் : ரிக்வேதம், யஜூர் வேதம், சாம வேதம், அதர்வ வேதம்.
பால: சரியாகச் சொன்னாய்...நம்; நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் முதல் முதலாகச் சிறை சென்ற பெண்மணி யார்?
இராஜலெட்சுமி : சரோஜினி தேவி.
பால ரொம்ப சரி. உலகிலுள்ள பறவைகளிலே மிகப் பெரியது எது?
பத்ம : வான்கோழிதானே?
பால : இல்லை.
சுப்பிர : நெருப்புக்கோழி.
பால: சரியான விடை. அது இரண்டரை மீட்டர் உயரம் இருக்கும். எடையும் ஏறத்தாழ 130 கிலோ கிராம் இருக்கும்... தாஜ்மஹாலைப் பற்றி உங்களுக்கெல்லாம் தெரியும். அதைக் கட்டி முடிக்க எத்தனை ஆண்டுகள் ஆயின. என்பது தெரியுமா?
மூவரும் (மெளனம்).
பால: என்ன, யாருக்குமே தெரியாதா? சரி, நானே சொல்லிவிடுகிறேன். 21 ஆண்டுகள் ஆயின. 1632ல் ஆரம்பித்தது...நவரத்தினங் கள் என்கிறோமே, அவைகளின் பெயர்களைக் கூற முடியுமா?
பத்ம: வைரம், நீலம், மாணிக்கம், புஷ்பராகம்... அப்புறம்...அப்புறம்.
இராஜ : ம ர க த ம், கோமேதகம், முத்து, வைடுரியம்.
பால: ஆக மொத்தம் எட்டுத்தானே சொன்னிர் கள்? இன்னொன்று...?
சுப்பிர: பவளம்.
பால : உம், மூவரும் சேர்ந்து கூறிவிட்டீர்கள். பம்பாய் மாநிலத்தில் பிறந்த பெரிய தேசத் தலைவர் ஒருவர் கணபதி விழா, சிவாஜிநாள் போன்ற விழாக்களை மிகுந்த ஆர்வத்துடன் நடத்தி வந்தார். அவர் யார் என்று தெரியுமா?
எல்லாரும் ; (மெளனம்)
ஒரு குறிப்புத் தருகிறேன். அவர் பர்மாவிலுள்ள மாண்டலேச் சிறையில் இருந்த போது கீதா ரகசியம்' என்ற நூலை எழுதினார்.
பத்ம : தெரிகிறது, தெரிகிறது. அவர்தான் பாலகங்காதர திலகர்.
பால: சரியாகச் சொன்னாய். நம் தேசத்தில் உள்ள மாநிலங்களிலேயே மிகப் பெரியது எது ?
சுப்பிர : உத்தரப் பிரதேசம்.
பால : தவறு.
இராஜ : மத்தியப் பிரதேசம்தான் மிகப் பெரியது.
பால: இராஜலெட்சுமி சொன்னதுதான் சரி... பெரும்பாலான தமிழ் மருந்துகளில் மூன்று பொருள்களைச் சேர்ப்பார்கள். அவற்றில் ஒன்று மிளகு. மற்றவை:
சுப்பிர: சுக்கு, மிளகு, திப்பிலி என்பார்களே!
பால: ஆமாம், அந்த மூன்றும்தான்.பூட்ஸ் போல வடிவம் உள்ள ஒரு நாடு இருக்கிறது. அது எந்த நாடு?
பத்ம: இத்தாலி .
பால: பத்மஜா, சரியாகச் சொல்லிவிட்டாய்.
கத்தியின்றி ரத்தமின்றி
யுத்தம் ஒன்று வருகுது'
என்று தொடங்கும் பாடலை இயற்றியவர் யார்?
சுப்பிர: நாமக்கல் கவிஞர்.
பால: சரி, அவருடைய முழுப் பெயர்?
சுப்பிர : நாமக்கல் வெ. இராமலிங்கம் பிள்ளை.
பால: அதுவும் சரி. இப்போது கோடைக் காலம். எல்லாப் பெட்டிக் கடைகளிலும் சோடாக் கலர்களாக இருக்கின்றன. இந்தச் சோடா பானத்தை முதல் முதலில் தயாரித்தவர் யார், தெரியுமா?
இராஜ: ஐசக் நியூட்டன்
பால: இல்லை. பத்மஜா, சுப்பிரமணியம், உங்களால் கூற முடியுமா?
பத்ம, சுப்பிர : தெரியவில்லையே!
பால: சரி, நானே சொல்லிவிடுகிறேன். ஜோசப் பிரீஸ்ட்லி என்ற இங்கிலாந்துக்காரர்தான் முதன் முதலில் சோடா பானத்தைத் தயாரித்தவர்...முதல் முதலில் மோட்டார் கார்களைப் பெரும் அளவிலும், குறைந்த செலவிலும் தயாரித்தவர் யார்?
பத்ம : ஹென்றி ஃபோர்டு.
பால: பத்மஜா சொன்னது சரியான விடை. அந்த ஹென்றி ஃபோர்டு, ஃபோர்டு ஃபோர்டு நிறுவனம் (Ford Foundation)என்ற அறநிலையம் ஒன்றை ஏற்படுத்தினார். அந்த அறநிலைய உதவியுடன் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு தென் மொழிகளிலும் நல்ல புத்தகங்களை வெளியிட, சென்னையிலே ஒரு நிறுவனம் அமைக்கப்பட்டது. அதன் பெயர் தெரியுமா?
பத்ம : எனக்குத் தெரியும். அந்த நிறுவனம் வெளியிட்ட பறக்கும் பாப்பா' என்ற புத்தகத்தை நான் படித்திருக்கிறேன். அதன் பெயர் தென்மொழிப் புத்தக நிறுவனம் .
பால: ஆம். Southern Languages Book Trust என்பது அதன் ஆங்கிலப் பெயர். கண்ணன் பிறந்து வளர்ந்த கோகுலமும், விளையாடித் திரிந்த பிருந்தாவனமும் எங்கே இருக்கின்றன?
சுப்பிர : கிண்டியில்.
(மற்றவர்கள் சிரிக்கிறார்கள்.)
இராஜ : மதுராவில் இருக்கின்றன.
பால: சரியான விடை...உத்தரப் பிரதேசத்தில் யமுனை ஆற்றங்கரையில் உள்ளது மதுரா"
3085–7
என்ற நகரம். அதை 'வட மதுரை' என்றும் அழைப்பார்கள்.......தமிழ் டிக்க்ஷனரியை அதாவது, அகராதியை முதல் முதலில் தயாரித்தவர் யார் என்று தெரியுமா?
இராஜ: தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாதய்யர்.
பால: இல்லை.
சுப்பிர : பரமார்த்த குரு என்ற வேடிக்கைக் கதையை எழுதினாரே, அவர் பெயர்.... தொண்டை வரை வந்துவிட்டது....
பால : உம், சீக்கிரம் வாய்க்கு வரவழை,
சுப்பிர: இதோ வரவழைத்து விட்டேன். வீரமா முனிவர்.
பால : சுப்பிரமணியா, சரியாகச் சொன்னாய். இத்தாலி நாட்டைச் சேர்ந்த அவர் தயாரித்த சதுரகராதிதான், பிறகு வெளிவந்த தமிழ் அகராதிகளுக்கெல்லாம் முன்னோடி ... இது வரை உலகிலேயே மிகப் பெரிய பரிசான நோபல் பரிசைப் பெற்ற இந்தியர்கள் யார், யார்?
பத்ம : இரவீந்திரநாத தாகூர், சர் சி.வி. ராமன்.
பால : இன்னும் இருவர் பெற்றிருக்கிறார்கள். அவர்கள் யார் யார் ?
சுப்பிர : எஸ். சந்திரசேகர்...
பால: சந்திரசேகருக்கு முன்பு நோபல் பரிசு பெற்றவர் டாக்டர் ஹரிகோவிந்த் கொரானா. சரி...
...பாம்புகளிலே சிலவற்றுக்கு விஷம் உண்டு. ஆனால், பல பாம்புகளுக்கு விஷம் இல்லை. விஷம் இல்லாத பாம்புகளில் நான்கைச் சொல்ல முடியுமா?
இராஜ : தண்ணிர்ப் பாம்பு, பச்சைப் பாம்பு.
சுப்பிர: கட்டுவிரியன்.
பால : ஐயோ, அது பொல்லாத விஷப் பாம்பு! கேட்டது விஷம் இல்லாத பாம்புகளை. இராஜலெட்சுமி இரண்டு பாம்புகளின் பெயர் களைச் சரியாகச் சொன்னாள். இன்னும் இரண்டு?
பத்ம: சாரைப் பாம்பு...மலைப் பாம்பு.
பால : ரொம்ப கரெக்ட் ... புரட்சிக் கவிஞர் பாரதிதாசனாருக்கு, அவரது பெற்றோர் வைத்த பெயர் என்ன?
சுப்பிர : கனக சுப்புரத்தினம்.
பால: சரியான விடை......'அம்பர்' என்ற வாசனைப் பொருள் எங்கிருந்து கிடைக்கிறது?
இராஜ : ஒருவித மரத்திலிருந்து.
பால : இல்லை.
சுப்பிர : பூக்களிலிருந்து.
பால: தவறு
பத்ம: தெரியவில்லை
பால: நானே சொல்லிவிடுகிறேன். திமிங்கிலத்தின் குடலிலிருந்துதான் அம்பர் எடுக்கப் படுகிறது...சரி, சுங்க வரி' என்கிறார்களே, அப்படியென்றால் என்ன?
இராஜ: வெளி நாடுகளிலிருந்து டி. வி., டிரான் சிஸ்டர், கடிகாரம், காமிரா-இப்படிச் சில பொருள்களைக் கொண்டு வரும்போது, அவற்றிற்கு வரி விதிக்கிறார்கள். அதற்குப் பெயர்தான் சுங்க வரி.
பால : இராஜலெட்சுமி, நீ சொன்னது ஓரளவு சரிதான். ஆனால், வெளிநாட்டிலிருந்து நம் நாட்டில் இறக்குமதியாகும் சில பொருள்களுக்கு மட்டுமல்ல; நம் நாட்டிலிருந்து வெளி நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் சில பொருள் களுக்கும் வரி விதிக்கிறார்கள். அதுவும் சுங்க வரிதான் ... பெரிய கோயில்களில் 63 நாயன்மார்களின் திருவுருவங்களைப் பார்த் திருப்பீாகள். அவர்களில் பெண்கள் யார் யார் தெரியுமா?
பத்ம : காரைக்காலம்மையார், மங்கையர்க்கரசியார்.
பால : இன்னும் ஒருவர் உண்டு. அவர் பெயர் இசை ஞானியார்...கடைசியாக ஒரு கேள்வி. சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒர் எழுத்தாளர் ஒரு கதை எழுதியிருந்தார். அதில் ஒரு பகுதியைக் கூறுகிறேன் :
‘தீபாவளிக்கு முதல் நாள் இரவு, செல்வம் மொட்டை மாடியில் நின்று கம்பி மத்தாப்புக் கொளுத்தினான். அதைப் பார்த்து அவன் தம்பி சேகரும், தங்கை கல்யாணியும் துள்ளிக் குதித்து மகிழ்ந்தார்கள். அப்போது வானத்திலேயிருந்த பூரணச் சந்திரனும் அந்தக் காட்சியைக் கண்டு மகிழ்ந்தது.' இதில் ஒரு தவறு இருக்கிறது. அது என்ன தவறு ?
இராஜ : தீபாவளி சமயத்திலே அமாவாசையாகத் தானே இருக்கும்? அப்போது சந்திரனைப் பார்க்க முடியுமா? அ து வு ம் பூரணச் சந்திரனை...?
எல்லாரும் : முடியாது, முடியாது. (சேர்ந்து சிரிக்கிறார்கள்.)
இடம் : முத்துராமலிங்கபுரம், காமராசர் மாவட்டம்
கேள்வி கேட்பவர் :
டாக்டர் மா. சூடாமணி
பங்கு கொள்வோர்
குமார், சீதாராமன், ராஜேஸ்வரி, சுப்பிரமணியம், ஆனந்த்
சூடாமணி : நாம் வசிக்கும் இந்த உலகத்திலே நிலப்பரப்பு அதிகமா? நீர்ப்பரப்பு அதிகமா?
குமார் : நிலப்பரப்புத்தான்.
சூடாமணி : தவறு.
ஆனந்த் நீர்ப்பரப்புத்தான்.
சூடாமணி : நிலப்பரப்பு இல்லையென்றால் நீர்ப் பரப்புத்தானே! நிலப்பரப்பு சுமார் 5 கோடியே 73 லட்சம் சதுர மைல். நீர்ப்பரப்பு சுமார் 13 கோடியே 74 லட்சம் சதுர மைல்...காட்மண்டு -இந்தப் பெயரைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?
சீதாராமன் : எனக்குத் தெரியும். செஞ்சிலுவைச் சங்கத்தைத் தோற்றுவித்தவர் பெயர்தான் காட்மண்டு.
ராஜேஸ்வரி 1 இல்லை. அவர் பெயர் காட்மண்டு இல்லை. ஹென்றி டுனான்ட்.
சூடாமணி : ஒரு குறிப்புத் தருகிறேன்.
காட்மண்டு ஒரு நாட்டின் தலைநகரம். இப்போதாவது சொல்ல முடியுமா?
சுப்பிரமணியம் : முடியும். நேபாள நாட்டின் தலைநகரம்தான் காட்மண்டு.
சூடாமணி : ரொம்ப சரி.டில்லி எந்த மாநிலத்தில் இருக்கிறது?
ராஜேஸ்வரி : எந்த மாநிலத்திலும் இல்லை, அதுவே ஒரு மாநிலமாகத்தான் இருக்கிறது.
சூடாமணி: சரியான விடை முன்பு அது பஞ்சாபின் ஒரு பகுதியாக இருந்தது. 1912ல் தனி மாநிலமாக அமைக்கப்பட்டது. இப்போது அது மத்திய அரசாங்கத்தின் நேரடி நிர்வாகத்தில் இருக்கிறது. ஐரோப் பாவின் பால் பண்ணை’ என்று எந்த நாட்டை அழைக்கிறார்கள்?
குமார் : டென்மார்க் நாட்டை.
சூடாமணி: ஆம். அங்கே தாது வளம் மிகக் குறைவு. ஆனாலும் நிலமும் நீரும் நிறைய உண்டு. கூட்டுறவு முறையில் பால் பண்ணைகளைத் துவக்கி நிறையப் பால், வெண்ணெய், பாலடைக் கட்டிகளை ஏற்றுமதி செய்கிறார்கள்..இந்தியாவில் முதல் முதலாகக் கிரிக்கெட் போட்டிப் பந்தயம் நடந்தது எந்த ஆண்டு என்று தெரியுமா?
எல்லோரும் : (மெளனம்)
சூடாமணி : 1907ஆம் ஆண்டு. அதில் ஆங்கிலேயர்கள், பார்சிகள், இந்துக்கள் மூவரும் சேர்ந்து ஆடினார்கள்...'குகன்' என்ற பெயர் யாரைக் குறிக்கிறது?
ராஜேஸ்வரி : இராமர் வனவாசம் போனபோது அவருக்குத் தோழனாக வந்தானே, அவனைத் தான் குறிக்கும்.
சுப்பிரமணியம் : முருகக் கடவுளுக்கும் குகன்' என்று ஒரு பெயர் உண்டல்லவா?
சூடாமணி: ஆம். குகன் என்பது இருவரையுமே குறிக்கும் பெயர்தான். இராமர், தன் தம்பியாகக் குகனை ஏற்றுக்கொண்டதை இராமாயணத்தில் படித்திருப்பீர்கள். அடியார்களின் உள்ளம் என்னும் குகையில் முருகன் வசிப்பதால் குகன்' என்ற ஒரு பெயரும் அவருக்கு உண்டு...சுவாமி விவேகானந்தர் 39 ஆண்டுகளே வாழ்ந்தார். அவரைப் போல் 39 ஆண்டுகள் வாழ்ந்த ஒரு தமிழ்க் கவிஞரின் பெயர் தெரியுமா?
ஆனந்த் : மகாகவி பாரதியார்.
சூடாமணி : சரியான பதில், நமக்கு மூன்று விதமான பற்கள் இருக்கின்றன. என்ன என்ன வகைப் பற்கள்?
சீதாராமன் : வெட்டுப் பற்கள், கோரைப் பற்கள், இன்னொன்று ..கடைவாய்ப் பற்கள்.
சூடாமணி : கரெக்ட். உணவுப் பொருட்களை வெட்டுவதற்கு வெட்டும் பற்கள்; கிழிப்பதற்குக் கோரைப் பற்கள்; அரைப்பதற்குக் கடைவாய்ப் பற்கள்...எல்லா மிருகங்களையும் விட, உடம்பிலே கொழுப்பு அதிகமாக உள்ள மிருகம் எது?
ஆனந்த்: யானை.
சூடாமணி: தவறு.
குமார் : காண்டாமிருகம்.
சூடாமணி : அதுவும் இல்லை.
சீதாராமன் : பன்றி.
சூடாமணி : சரியான விடை. பன்றியின் எடையில் பாதி கொழுப்பாக இருக்கும். அதை உருக்கிச் சுத்தம் செய்து நெய்போலப் பயன்படுத்துகிறார்கள்...இயேசு கிறிஸ்துவுக்கு அவரது பெற்றோர் வைத்த பெயர் தெரியுமா?
சுப்பிரமணியம் : யோசுவா.
சூடாமணி : ரொம்ப கரெக்ட். அதையே கிரேக்க மொழியில் ஏசு என்றார்கள்...நீர் யானைகள் இப்போது எந்த எந்தக் கண்டங்களில் வாழ்கின்றன?
சீதாராமன் : அமெரிக்கா, ஆஸ்திரேலியா.
சூடாமணி : தவறு. அது ஒரே ஒரு கண்டத்தில் தான்...வாழ்கிறது. அது ஆப்பிரிக்காதான். நம் தேசத்தில் அதிகமான அளவில் பழுப்பு நிலக்கரி கிடைக்கும் இடம் எது?
ராஜேஸ்வரி : நெய்வேலி.
சூடாமணி : சரியான விடை. தென்ஆர்க்காடு மாவட்டத்தில் உள்ள நெய்வேலியில்தான் அதிகமான பழுப்பு நிலக்கரி கிடைக்கிறது. எல்லா மிருகங்களுக்கும் குரல் உண்டு, ஒரே ஒரு மிருகத்தைத் தவிர. அது எந்த மிருகம்?
குமார் : ஒட்டகச்சிவிங்கி.
சூடாமணி : அடடே, குமார் சரியாகச் சொல்லி விட்டானே!...முதல் முதலாக உங்களுக்காகத் தமிழில் வெளி வந்த வாரப் பத்திரிகை எது? அதை நடத்தியவர் யார்?
சுப்பிரமணியம் : அணில்'. அதை நடத்தியவர். தமிழ்வாணன்.
சூடாமணி : அதன் ஆசிரியரா யிருந்தவர்தான் தமிழ்வாணன் அவர்கள். நடத்தியவர் : அணில் அண்ணன் என்ற பெயரில் எழுதி வந்தவை. கோவிந்தன் அவர்கள். வை.கோ. என்றால் அநேகமாக எல்லோருக்கும் தெரியும், புத்தகங்கள் வெளியிடுவதில் பல புதுமை களைச் செய்தவர். பல எழுத்தாளர்களும், பதிப்பாளர்களும் தோன்ற மிகவும் உதவியவர்.ஜோக் நீர் வீழ்ச்சிக்கு இன்னொரு பெயர் உண்டு. என்ன பெயர் தெரியுமா?
ஆனந்த் : ஜெர்சாப்பா நீர்வீழ்ச்சி.
சூடாமணி : கரெக்ட் பாரதியார் பாரதத் தாயைப் பற்றிப் பாடும்போது முப்பது கோடி முகமுடையாள் எங்கள் தாய் என்று பாடினார். அவர் காலத்தில் 30 கோடி மக்கள்தான் நம் தேசத்தில் இருந்தார்கள். இப்போது இந்திய மக்கள் தொகை எவ்வளவு என்று தெரியுமா?
குமார் 50 கோடி.
சீதாராமன் இல்லை : நான் சொல்கிறேன் 60 கோடி. -
சூடாமணி : 74 கோடியையும் தாண்டிவிட்டது. சுமார் 74 கோடியே 63 லட்சம்..இந்தியாவில் ஒரு மாநிலம் இருக்கிறது. அதில் 5ல் 2 பங்கு மணல் வெளியாகவே அதாவது, பாலைவன மாகவே இருக்கிறது. அது எந்த மாநிலம்?
ராஜேஸ்வரி : இராஜஸ்தான்.
சூடாமணி: சரியான விடை நம் சென்னைப் பல்கலைக் கழகத்தில் முதல் முதலாக பி. ஏ. பட்டம் பெற்றார் ஒரு தமிழறிஞர். அவர் யார்?
ஆனந்த்: உ. வே. சாமிநாதய்யர்.
சூடாமணி: இல்லை. வேறு யாருக்காவது தெரியுமா?
எல்லோரும் : (மெளனம்)
சூடாமணி: சரி, நானே சொல்கிறேன். அவர் பெயர் சி. வை. தாமோதரம் பிள்ளை. இலங்கையில் பிறந்தவர். பனை ஒலையி லிருந்து பல நூல்களைப் பதிப்பித்தார். பல நூல்களையும் எழுதித் தந்தார். சரி, நம் தமிழ் நாட்டுப் பல்கலைக் கழகத் துணை வேந்தராக இருக்கும் ஒருவர், சிறந்த கவிஞராகவும் திகழ்கிறாரே, அவர் பெயர் தெரியுமா?
சுப்பிரமணியம் : எனக்குத் தெரியும். சமீபத்தில் என் அப்பாவுக்குத் தெரிந்த ஒருவருக்கு ஒர் அழைப்பு வந்திருந்தது. அதிலே இருந்தது அந்தப் பெயர். அவர்தான் அண்ணா தொழில் நுட்பப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர். பெயர் வி. சி. குழந்தைசாமி. ஆனால், குலோத்துங்கன் என்ற பெயரில் கவிதை எழுதுகிறார்.
சூடாமணி : அடேயப்பா! இவ்வளவு தூரம் பார்த்து வைத்திருக்கிறாயே! நம் தேசத்தின் தலைநகராகிய டில்லி எந்த ஆற்றங்கரையில் இருக்கிறது?
ஆனந்த்: யமுனை ஆற்றங்கரையில்.
சூடாமணி : தக்க பதில்... தீவு என்றால் என்ன?
குமார் : சுற்றிலும் கடல் இருக்கும்.
சூடாமணி : கடல் இருந்தால் மட்டும்தானா தீவு என்கிறோம் நாலு பக்கமும் கடல், ஆறு, ஏரி போன்ற நீர்ப்பரப்புகளால் சூழப்பட்டிருப்பதுதான் தீவு. இருளர் என்று சொல்கிறார் களே ஒரு வகைப் பழங்குடிகள், அவர்கள் எங்கே அதிகமாக வசிக்கிறார்கள் ?
சீதாராமன் : கோயமுத்துரிலே,
சூடாமணி : கோயமுத்தூர் நகரிலா?
சீதாராமன் : இல்லை. கோயமுத்துனர் மாவட்டத் திலே.
சூடாமணி : விடை சரிதான். இருந்தாலும், கோயமுத்துார் மாவட்டத்தில் உள்ள அட்டப்பாடி மலையில் என்று சொல்லியிருந்தால் இன்னும் சரியாக இருந்திருக்கும்...இந்தியா விலே முதல் முதலாகப் பொது மருத்துவமனை நிறுவப்பட்டது எந்த நகரில்?
ஆனந்த்: டில்லியில், சூடாமணி இல்லை. வேறு யாருக்காவது தெரியுமா?
மற்றவர்கள் : (மெளனம்)
சூடாமணி : நானேதான் சொல்லவேண்டுமா? சென்னையில்தான் முதல் முதலாகப் பொது மருத்துவமனை நிறுவப்பட்டது. முதல் முதலாக நகராட்சி அமைக்கப்பட்டதும் சென்னை நகரில்தான்.சென்னையின் முதல் மேயர் யார் தெரியுமா?
குமார் : தெரியும். செட்டி நாட்டு அரசர் ராஜா சர் முத்தையா செட்டியார்.
சூடாமணி: கரெக்ட்...திருவருட்பா என்ற நூலை இயற்றியவர் யார்?
குமார் : சேக்கிழார்.
சூடாமணி : சேக்கிழார் இயற்றியது பெரிய புரணம்'...வேறு யாருக்காவது தெரியுமா?
ஆனந்த் : நான் சொல்கிறேன். இராமலிங்க அடிகளார்.
சூடாமணி: சரியான பதில் ... 1983-ல் உலகத் திலேயே மிகப் பெரிய பரிசாகிய நோபல் பரிசை நம் நாட்டு விஞ்ஞானி பெற்றிருக்கிறார். அவர் பெயர் தெரியுமா?
ராஜேஸ்வரி : தெரியும். எஸ். சந்திரசேகர்.
சூடாமணி: சரியாகச் சொன்னாய். இவருக்கு ஏற்கெனவே நோபல் பரிசு பெற்ற ஒருவர் உறவினர். அவர் யார்?
குமார் : சர். சி. வி. ராமன்தானே?
சூடாமணி: ஆம், இவருடைய தந்தையின் சகோதரர்தான் சர். சி. வி. ராமன். அவரும் இவரைப் போல் பெளதிகத் துறையில்தான் பரிசு பெற்றார்...உலகின் பல்வேறு நாடு களில் ஒலிம்பிக் ஆட்டங்கள் நடைபெறு கின்றன என்பதும் அதில் பல நாட்டைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்கிறார்கள் என்பதும் உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆனால், அது எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது என்பது தெரியுமா?
ஆனந்த்: ஒவ்வோராண்டும்தானே? சூடாமணி : இல்லை.
சீதாராமன் : 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை
சூடாமணி : ஆம், சரியான விடை... மீனும் பாம்பும் தூங்கும்போது கண்களைத் திறந்து வைத்துக் கொண்டே தூங்குகின்றன. ஏன் அவை நம்மைப் போன்று கண்களை மூடிக் கொண்டு தூங்குவதில்லை?
ஆனந்த் : அவைகளுக்குத்தான் கண் இமைகள் இல்லையே! எப்படி மூடும்?
சூடாமணி : சபாஷ்! சரியான பதில்.
இடம் : அண்ணா நகர், சென்னை
கேள்வி கேட்பவர் : பி. பத்மா
பங்கு கொள்வோர் :
கே. வரதராஜன், பமீலா நாராயணன். ஆர். பிரபாகரன் 3055–s
பதமா : கப்பல் ஒட்டிய தமிழர் சிதம்பரனார் பிறந்த அதே மாதத்தில், அதே தேதியில், நம் நாட்டு ஜனாதிபதியாக இருந்த ஒருவரும் பிறந்தார். அவர் யார்?
பமீலா : ராஜேந்திர பிரசாத்,
பத்மா இல்லை: ராஜேந்திர பிரசாத் பிறந்தது டிசம்பர் மாதம் 3-ஆம் தேதி, இவர்கள் பிறந்தது செப்டம்பர் 5-ஆம் தேதி, ஒரு குறிப்பு தருகிறேன்... அவரும் தென்னிந்தியர்தான்!
வரதராஜன்: சஞ்சீவிரெட்டி.
பத்மா : அவரும் இல்லை.
பிரபாகரன் : ம்...... ம்...... தெரிந்து வி ட் ட து. டாக்டர் ராதாகிருஷ்ணன். அவரது பிறந்த நாளைத்தானே ஆசிரியர் தினமாகக் கொண்டாடுகிறோம்!
பத்மா : சரியாகச் சொல்லி விட்டாய்... கர்நாடக மாநிலத்திற்கு முன்பு என்ன பெயர் இருந்தது.
வரத: மைசூர் மாநிலம்.
பத்மா : ரொம்ப சரி. 1973-ல்தான் கர்நாடகம் என்று பெயர் மாற்றப்பட்டது. பாலே நடனம்' என்று சொல்கிறார்களே. அது
என்ன என்று சிறிது விளக்கமாகக் கூற முடியுமா?
பமீலா : நான் கூறுகிறேன். ரஷ்யக் குழு ஒன்று சென்னைக்கு வந்து பாலே நடனம் நடத்தியது. அதில் யாருமே பாடவும் இல்லை; பேசவும் இல்லை. பின்னணி இசைக்குத் தக்கபடி ஆடினார்கள். அபிநயம் மூலமாகவே ஒரு கதையைத் தெரிவித்தார்கள்.
பத்மா : அடடே, மிகவும் நன்றாகக் கூறி விட்டாயே! பின்னணி இசையுடன் அபிநயம் மூலமே ஒரு கதையை உணர்த்தும் ஒருவகை மேல்நாட்டு நடனமே பாலே என்பது... இந்தியாவில் வெளியான முதல் செய்தித் தாள் எது?
வரத : வங்காள கெஜெட்,
பத்மா : கரெக்ட். 1780-ல் அது கல்கத்தாவிலிருந்து வெளி வந்தது. பர்மா நாட்டின் தலைநகரம் எது?
பிரபா : ரங்கூன்.
பத்மா : சரியான விடை. ஐக்கிய அமெரிக்க நாடு களின் தலைநகரமாக இப்போது வாஷிங்டன் இருக்கிறது. இதற்கு முந்தி எது தலைநகரமாக இருந்தது!
பிரபா : நியூயார்க் !
பத்மா : சரியாகச் சொன்னாய். அமெரிக்கா விடுதலை பெற்று 1776-லிருந்து 1800-ஆம் ஆண்டு வரை நியூயார்க்தான் தலைநகரமாக இருந்தது. தரைப்படை கடற்படை, விமானப் படை ஆகிய ஒவ்வொன்றுக்கும் தனியாக ஒரு கொடி உண்டு. இதோ இங்குள்ள கொடி நம் தேசத்தின் எந்தப் படைக்கு உரிய கொடி என்று தெரியுமா?
(படம்)
வரத : கப்பற்படைக் கொடி.
பத்மா: தவறு.
பமீலா: தரைப்படைக் கொடி.
பத்மா : சரிதான். இருந்தாலும், மூன்றிலே ஒன்றைச் சொல்லியாயிற்று. மீதமுள்ள இரண்டிலே ஒன்றைச் சொல்லி வைப்போமே என்று சொல்லக்கூடாது. போகட்டும். மகாத்மா காந்தி பிறந்த போர்பந்தர் என்னும் ஊர் எந்த மாநிலத்தில் இருக்கிறது?
வரத : குஜராத்தில்.
பத்மா: ரொம்ப சரி. டென்னிஸ் எந்த நாட்டில் தோன்றிய விளையாட்டு?
பிரபா : இங்கிலாந்தில்.
பத்மா: ஆம் ஆங்கிலேயர் நம் நாட்டுக்கு வந்த பிறகே, இங்கும் இந்த விளையாட்டு பரவியது . தமிழ்ப் பல்கலைக் கழகம் எந்த ஊரில் இருக்கிறது?
வரத: தஞ்சாவூரில். பத்மா : சரி, உலகத்திலே மிகவும் உயரத்தில் இருக்கின்ற நாடு எது?
வரத: சிம்லா.
பத்மா தவறு. நான் கேட்டது எந்த நாடு என்று?
பமீலா : திபேத்து.
பத்மா : கரெக்ட். அதனால்தான் அதை 'உலகத்தின் கூரை" என்கிறார்கள். என் கடன் பணி செய்து கிடப்பதே என்று பாடியவர் யார்?
வரத: அப்பர்.
பிரபா: இல்லை. திருநாவுக்கரசர்.
பத்மா : இருவர் கூறியதும் சரியே. திருநாவுக் கரசரைத்தான் அப்பர் என்றும் அழைப்
பார்கள். ஷேக்ஸ்பியர் எத்தனை நாடகங்கள் எழுதியிருக்கிறார். தெரியுமா?
எல்லோரும் : (மெளனம்)
பத்மா : 37 நாடகங்கள். மங்கள முடிவு நாடகங்கள், சோக முடிவு நாடகங்கள், சரித்திர நாடகங்கள் என்று மூன்று வகையில் எழுதி யிருக்கிறார்... காஷ்மீர் நகரம் எந்த ஆற்றங் கரையில் இருக்கிறது?
பமீலா: ஜீலம் நதிக்கரையில்.
பத்மா: சரியான விடை, ஆஸ்திரேலியாவின் தேசியப் பறவை எது?
வரத: கழுகு.
பத்மா: தவறு.
பிரபா :நினைவில் இருக்கிறது. வர மாட்டேன் என்கிறது. படத்தில் கூட அதைப் பார்த்திருக்கிறேன்? அது நெருப்புக் கோழி மாதிரி உயரமாயிருக்கும். பறக்கத் தெரியாத பறவை. அதன் பெயர் கி. மு....இல்லை. இல்லை. ஈமு.
பத்மா: ம்... அதன் பெயர் ஈ.மு தான். 6 அடி உயரம் வளரும். ஒவ்வொரு காலிலும் 3 விரல்கள் இருக்கும்...சரி, அடிக்கடி நாம் பார்க்கிறோம், பழகுகிறோமே நாய் அதற்கு
முன் காலில் எத்தனை விரல்கள்? பின்காலில் எத்தனை விரல்கள்?
பமீலா: இரண்டிலுமே ஐந்து விரல்கள்தான்.
பத்மா: இல்லை. முன் காலில் 5 விரல்களும் பின் காலில் 4 விரல்களும் இருக்கும். பின் காலில் 5 விரல்கள் இருப்பது அபூர்வமே... இந்தியாவில் மிகப் பெரிய இலக்கியப் பரிசான ஞான பீடப் பரிசு ஒவ்வோராண்டும் வழங்கப்படுகிறது. நம் தமிழ்நாட்டில் இந்தப் பரிசைப் பெற்றவர் யார்?
வரத: அகிலன்.
பத்மா : சரி, இந்தப் பரிசை ஏற்படுத்தியவர்கள் யார் என்று தெரியுமா?
எல்லாரும் : (மெளனம்).
பத்மா : சாந்தி பிரசாத் ஜெயின், அவரது மனைவி ரமாஜெயின் இருவரும் ஏற்படுத்தினர். இப்போது அந்த இருவரும் உயிருடன் இல்லை...தமிழ்த் தாத்தா உ. வே. சாமி நாதய்யர் அவர்களுக்கு, அவரது பெற்றோர் வைத்த பெயர் என்ன?
வரத: வேங்கடராமன்.
பத்மா : ஆமாம். பாட்டனார் பெயரையே பேரனுக்கு வைத்தார்கள். மாமனார் பெயரை மருமகள் சொல்லக் கூடாது என்று நினைத்த
அவரது தாயார், அவரை சாமிநாதன் என்று அழைத்தார்கள். அந்தப் பெயரே நிலைத்து விட்டது. இதோ இந்தப் படத்திலிருக்கும் பறவையின் பெயர் என்ன, தெரியுமா?
(படம்)
பிரபா : நீர் வாத்து.
பத்மா : இல்லை.
பமீலா : எனக்குத் தெரியும். பாம்புத் தாரா.
பத்மா: சரியான விடை. இது தண்ணிரில் நீங்தும்போது இதன் தலையும் கழுத்தும் மட்டுமே வெளியில் தெரியும். துரத்திலிருந்து பார்த்தால் பாம்பு நீந்துவது போல் இருக்கும். துருவ நட்சத்திரத்துக்கு ஒரு தனித்தன்மை உண்டு. அது என்ன?
வரத: எல்லா நட்சத்திரங்களும் நகரும். துருவ நட்சத்திரம் மட்டும் நகராமலே இருக்கும்.
பிரபா : இல்லை. நான் சொல்கிறேன். துருவ நட்சத்திரம் சூரியனைப்போல் 4000 மடங்கு ஒளி உடையது என்று நான் படித்திருக்கிறேன்.
பத்மா : இருவர் சொன்னதும் சரியே. துருவ நட்சத்திரம் ஒரே இடத்தில் இருப்பதால், அதை வைத்தே மாலுமிகள் அக்காலத்தில் திசையைத் தெரிந்து கொள்வார்கள். இப்போதுதான் திசை காட்டும் கருவி வந்து விட்டதே! சூரியனைப் போல் 4000 மடங்கு, ஒளி இருந்தாலும், அது சூரியனை விட வெகு தூரத்தில் இருப்பதால், ஒளி நமக்கு அதிக மாகத் தெரிவதில்லை. தனக்கு உதவி செய்த வருக்கே துரோகம் செய்பவனைப் புல்லுருவி' என்று திட்டுகிறார்களே, புல்லுருவி என்றால் என்ன ?
பமீலா . அது ஒரு செடி.
பத்மா : அது சரி. அதன் குணம் என்ன?
எல்லாரும் : (மெளனம்).
பத்மா : இந்தச் செடி ஏதேனும் ஒரு மரக்கிளையில் வேரை ஊன்றிக் கொண்டு, அங்கேயே வளரும். அதிலிருந்து பல பக்க வேர்கள் மரத்துக்குள்ளே செல்லும் அந்த மரத்திலுள்ள சத்துப் பொருள்களை இந்தச் செடி உறிஞ்சி எடுத்துக் கொண்டு, அந்த மரத்திற்கே கெடுதல் செய்யும். வளர இடம் கொடுத்த மரத்திற்கே கேடு செய்யும். அதனால்தான் உதவியவருக்கே துரோகம் செய்பவனைப் புல்லுருவி என்கிறார்கள்...
மதுரையைத் தலைநகராக வைத்து அரசாண்டு புகழ்பெற்றார் ஒர் அரசி. அவர் பெயர் தெரியுமா?
பமீலா : மங்கம்மாள்.
பத்மா: அடே, பமீலா சரியாகச் சொல்லி விட்டாளே! இரண்டாம் சொக்கநாதர் என்ற தன் பேரனுக்குக் காப்பாளராக இருந்து 17 ஆண்டுகள் திறமையாக ஆண்டவர் மங்கம்மாள்...கரும்பு அதிகமாக விளையும் நாடு எது?
பிரபா : நம் இந்தியாதான்.
பத்மா : கரெக்ட். கியூபா, பிரேசில், ஹாவாய், ஜாவா ஆகிய இடங்களிலும் கரும்பு விளைகிறது. இருந்தாலும் நம் நாட்டில்தான் அதிகம்...காஞ்சிபுரத்தில் நிறைய கோயில்கள் இ ரு ப் ப த க க் கேள்விப்பட்டிருப்பீர்கள். மொத்தம் எத்தனை கோயில்கள் என்று தெரியுமா?
வரத : 75.
பத்மா: என்ன, 50 கோயில்களைக் குறைத்துச் சொல்கிறாயே! மொத்தம் 125 கோயில்கள் அங்கு இருக்கின்றன. இவற்றில் 40 கோயில்கள் பெரியகோயில்கள். சரி. இப்போது ஒரு விடுகதை. விடுவியுங்கள்; பார்க்கலாம்.
காகிதத்தைக் கண்டால்
கண்ணிர் விடுவான்.
முக்காடு போட்டால்
சொக்காயில் தொங்குவான்.
பமீலா ; பேனா. பத்மா : என்ன பேனா? கட்டைப் பேனாவா?
பமீலா : இல்லை; பவுண்டன் பேனா.
பத்மா : சரி, சென்னைத் துறைமுகத்தில் வேலை பார்த்த ஒருவர், உலகம் போற்றும் கணிதை மேதையாக விளங்குகிறார்......
வரத : நான் சொல்கிறேன். கணிதை மேதை இராமானுஜம்.
பத்மா: கரெக்ட் சட்டமன்றத் தேர்தலில் எத்தனை வயதானவர் வாக்கு அளிக்கலாம்: எத்தனை வயதானவர் வேட்பாளராக நிற்கலாம்?
பிரபா : 21 வயதானவர்கள்.
பத்மா . இது முதல் கேள்விக்கு விடையா இரண்டாம் கேள்விக்கு விடையா?
பிரபா : இரண்டுக்கும்தான்.
பத்மா : முதல் கேள்விக்கு விடை-21வயது. சரிதான். இரண்டாவது கேள்விக்கு 25வயது என்பதுதான் சரி. முப்பழம்' என்கிறார்களே, அவை எந்த எந்தப் பழங்கள்?
பமீலா: மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழம்.
பத்மா : ஆம். மா, பலா, வாழை என்பார்கள். நத்தைக்கு எத்தனை கொம்புகள்?
வரத : கொம்புகளா? (எல்லாரும் சிரிக்கிறார்கள்).
பத்மா : ஆம், அவற்றை உணர் கொம்புகள் என்பார்கள்.
வரத: இரண்டு கொம்புகள்.
பத்மா: ஆட்டுக்கும் மாட்டுக்கும் இரண்டு கொம்புகள்தான். ஆனால், நத்தைக்கு கொம்புகள்! இரண்டு நீளமாக இருக்கும் இரண்டு குட்டையாக இருக்கும். ஒவ்வொரு நெட்டைக் கொம்பின் உச்சியிலும் கறுப்பாக புள்ளி போல் இருக்குமே, அதுதான் அதன் கண்!